டிரம்ப் எதிர்பார்க்காத அடியை கொடுத்த மோடி.. இந்தியாவிடம் மோதினால் அது அமெரிக்காவாக இருந்தாலும் மண்ணை தான் கவ்வும்.. இந்தியாவிடம் அமெரிக்கா கெஞ்சும் நாள் சீக்கிரம் வரும்..

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மற்ற சிறிய நாடுகளை போல அதிக வரி விதித்தால் இந்தியா பயந்துவிடும் என்றும், தனது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்றும் தவறாக கணக்கிட்டுவிட்டார். இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு முதலில் 25%…

Trump warns that if India imposes higher tariffs on American goods, we will do the same

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மற்ற சிறிய நாடுகளை போல அதிக வரி விதித்தால் இந்தியா பயந்துவிடும் என்றும், தனது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்றும் தவறாக கணக்கிட்டுவிட்டார். இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு முதலில் 25% வரி விதித்தவர், பின்னர் திடீரென அதை 50% ஆக உயர்த்தினார். ஆனால், ட்ரம்ப் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏற்றுமதியின் பங்கு என்பது வெறும் 2% மட்டுமே. அந்த 2%-ல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் அளவு மிக மிகக் குறைவு. எனவே, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களும் நிறுத்தப்பட்டாலும், இந்தியாவின் ஜிடிபி-யில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஒரு சில நாட்கள் பங்குச்சந்தை சரியும் என்பதை தவிர, இந்த வரிவிதிப்பு இந்தியாவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றுதான் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவுடன் மோதிய நாடுகள் வீழ்ந்ததுதான் வரலாறு

இந்தியாவை எதிர்த்த எந்த நாடும் வெற்றி பெற்றதில்லை என்பதுதான் வரலாறு. சமீபத்தில், மாலத்தீவு அரசு இந்தியாவை ஒரு எதிரி நாடாக கருதிய நிலையில், ஒரு சில மாதங்களிலேயே இந்தியாவிடம் சரணடைந்தது. பாகிஸ்தானை தூண்டிவிட்ட சீனாவும் மூக்குடைப்பட்டது. வங்கதேசம் அவ்வப்போது இடையூறுகள் கொடுத்தாலும், இந்தியாவுடன் நேரடியாக மோதும் அளவுக்கு அதற்கு துணிச்சல் இல்லை. எனவே, இந்தியா என்பது அதிகாரபூர்வமாக வல்லரசு நாடாக அறிவிக்கப்படாவிட்டாலும், உலகின் நம்பர் ஒன் வல்லரசு நாடு இந்தியா தான் என்பதை டிரம்ப் விரைவில் புரிந்துகொள்வார். தனது ஆட்சிக்காலத்திற்குள் அவர் இந்தியாவிடம் சரணடைவார் என்றும், தனது தவறுக்காக வருத்தம் தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் இரட்டை வேடம்

இந்தியாவை மட்டம் தட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சர்வதேச நாணய நிதியம் (IMF) வழியாக பாகிஸ்தானுக்குக் கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டது. அந்த கடன் பணம் முழுவதும் தீவிரவாதிகளுக்கு சென்று, அந்த தீவிரவாதிகள் இந்தியாவை தாக்க பயன்படுத்தப்படுகிறார்கள். ஆக, மறைமுகமாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த அமெரிக்காவும் ஒரு விதத்தில் காரணம். இதையெல்லாம் தெரிந்துதான், சரியான நேரத்திற்காகக் காத்திருந்த இந்தியா, இப்போது ட்ரம்பின் வரிவிதிப்பை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று இந்தியாவுக்கு சொல்லும் அமெரிக்கா, ஏன் ரஷ்யாவிடமிருந்து யுரேனியம் மற்றும் பல்லேடியம் போன்ற பொருட்களை இறக்குமதி செய்கிறது என்று பிரதமர் மோடி எழுப்பிய கேள்விக்கு, ட்ரம்பால் நேரடியாக பதிலளிக்க முடியவில்லை. “அது சரிபார்க்க வேண்டிய ஒன்று” என்று அவர் கூறியது, ரஷ்யாவிடமிருந்து என்னென்ன பொருட்கள் இறக்குமதி யாகிறது என்பதுகூட தெரியாமல் அவர் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. இந்த அளவுக்கு அவர் ஒரு கோமாளியாக இருக்கிறார் என்றுதான் உலக நாடுகள் விமர்சிக்கின்றன.

இந்தியாவின் பலம்

மொத்தத்தில், வரி விதிப்பு என்ற போர்வையில் இந்தியாவை பயமுறுத்த நினைத்த ட்ரம்ப் தான் அசைக்கப்படுவார். இந்தியா நட்பு பாராட்டினால் அதற்கு உறுதுணையாக இருக்கும். ஆனால், மிரட்டல் என்று வந்தால் அதை தீவிரமாக எதிர்க்கும். எனவே, இந்தியாவிடம் ட்ரம்பின் பாச்சா எடுபடாது என்றுதான் கூறப்படுகிறது.