உன்னால முடிஞ்சத பாத்துக்கோ.. வல்லரசாக இருந்தாலும் அடிபணிய மாட்டோம். டிரம்பின் திட்டங்களை அடித்து நொறுக்கிய மோடி.. இந்தியா தான் இனி வல்லரசு..!

அமெரிக்கா விதித்துள்ள புதிய வர்த்தக வரியை அடுத்து, இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்தியாவின் முக்கிய அமைச்சர்கள் ராஜநாத் சிங் மற்றும் நிதின் கட்கரி போன்ற…

trump modi

அமெரிக்கா விதித்துள்ள புதிய வர்த்தக வரியை அடுத்து, இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்தியாவின் முக்கிய அமைச்சர்கள் ராஜநாத் சிங் மற்றும் நிதின் கட்கரி போன்ற மூத்த அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசியுள்ளனர். இந்த நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் நிகழ்த்திய உரை, இந்தியாவின் நிலைப்பாட்டை டிரம்புக்கு கொடுத்த மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தனது உரையில், இந்தியாவின் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், அதிகரிக்கும் அழுத்தத்தை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும், தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என்ற அவரது பேச்சு டிரம்பின் மிரட்டலுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டோம் என மறைமுகமாக உணர்த்துகிறது.

மேலும் அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு ஒரு பதிலடியாக, மோடி “மேக் இன் இந்தியா” தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்திய தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், மக்கள் அவற்றை வாங்கவும் அவர் ஊக்குவித்தார். இந்த முயற்சி, உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு தாக்கங்களை எதிர்கொள்ள உதவும்.

அமெரிக்க வரிகளால், இந்தியாவின் ஜவுளி மற்றும் உணவு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்றாலும், இதை சமாளிக்க, இந்திய அரசு சில பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை, குறிப்பாக ஜவுளிக்கான வரியை 12% இலிருந்து 5% ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது. இது உள்நாட்டு தேவையை அதிகரித்து, சர்வதேச சந்தையில் ஏற்படக்கூடிய இழப்புகளை ஈடுகட்ட உதவும்.

உள்நாட்டுத் தேவை மீது கவனம் செலுத்துவது இந்தியாவின் பலம் என்றும், இது வெளிநாட்டு அழுத்தங்களை எதிர்க்க உதவும் என்றும் பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு தெளிவாக கூறியுள்ளார். வரவிருக்கும் தீபாவளி பண்டிகை பரிசாக இந்த ஜிஎஸ்டி மாற்றங்கள் அமல்படுத்தப்படலாம் என்றும் இது நுகர்வோர் செலவினங்களை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்பது பிரதமரின் நேற்றைய பேச்சு தெளிவாக உணர்த்தியுள்ளது.