மிஸ் இந்தியாவாக குஜராத் மாடல் அழகி தேர்வு.. மகுடம் அணிவித்த நடிகை ஊர்வசி ரவுட்டேலா

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்தியாவின் பிரபலமான புகழ்பெற்ற நகரங்களில் நடத்தப்படும் இந்த அழகிப் போட்டியில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாடல் அழகிகள் பங்குபெறுவர். அவர்கள்…

Miss India

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்தியாவின் பிரபலமான புகழ்பெற்ற நகரங்களில் நடத்தப்படும் இந்த அழகிப் போட்டியில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாடல் அழகிகள் பங்குபெறுவர். அவர்கள் பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பின்னர் மிஸ் இந்தியாவாக முடிசூட்டப்படுவார்கள். இவற்றில் பொது அறிவு, முடிவெடுக்கும் திறன், கேட் வாக், பாரம்பரிய அலங்கார உடை போன்ற பல தேர்வுகள் உண்டு.

2024-ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியானது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் நாடெங்கிலும் இருந்து பல்வேறு அழகிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 51 பேர் கலந்து கொண்ட இப்போட்டியில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ரியா சிங்கா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தினை வென்றார். இவருக்கு வயது 19.

அப்பா வாழ்ந்த தெருவுக்கு அவர் பெயர் சூட்டுங்க.. எஸ்.பி.பி. மகன் எஸ்.பி.பி. சரண் முதல்வருக்குக் கோரிக்கை

வெற்றிபெற்ற அழகி ரியா சிங்காவிற்கு பாலிவுட் நடிகையும், முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அழகியுமான ஊர்வசி ரவுட்டேலா மகுடம் சூட்டினார். வெற்றி பெற்ற ரியா சிங்கா அடுத்து உலக அளவிலான அழகிப் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டியில் பிரஞ்சல் பிரியா இரண்டாம் இடமும், சுஷ்மிதா ராய் என்ற அழகி மூன்றாம் இடமும் பெற்றனர்.