கொல்கத்தாவில் நடந்த போராட்டம் ஒன்றில் வன்முறை வெடித்த நிலையில், அதை கட்டுப்படுத்த தவறிய மம்தா பானர்ஜியின் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கொல்கத்தா உயர்நீதிமன்றம். அமைதியை நிலைநாட்ட மத்திய பாதுகாப்பு படையை இறக்க உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு வக்பு திருத்த மசோதாவை நிறைவேற்றிய செய்த நிலையில், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் தீவிர போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், பொதுசொத்துகள் சேதமடைந்ததாகவும், சில உயிரிழப்புகளும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாஜக மூத்த தலைவர் ஒருவர், “ஒரு தந்தை–மகன் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைகள் மம்தாவின் ஆட்சியில் வழக்கமாகிவிட்டன,” எனக் கடுமையாக விமர்சித்தார். மேலும், நூற்றுக்கணக்கான இந்துக்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், பாஜக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்து, கொல்கத்தாவில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த மத்திய பாதுகாப்புப் படைகளை உடனடியாக இறக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை உறுதி செய்ய மத்திய படைகளை களமிறக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அவமரியாதையாக இருப்பதாக எதிர்கட்சிகள் விமர்சனம்செய்து வருகின்றன. ஆனால் மம்தா, எதுவுமே நடக்காததுபோல் நடந்துகொண்டு, அடுத்த கலவரத்துக்கே திட்டமிடுகிறார் எனவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
“இது மேற்குவங்கமா? அல்லது வங்கதேசமா? என்று தெரியவில்லை. கோவில்கள் தாக்கப்படுகின்றன, இந்து வீடுகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. விரைவில் இந்த மாநிலம் ‘மேற்கு வங்கதேசம்’ ஆகிவிடும்,” என பாஜக தேசிய தலைவர் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மத்திய அரசு அதிரடியாக 300 பி.எஸ்.எப் வீரர்களை கொல்கத்தாவில் இறக்கியுள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.
மேலும், வன்முறையில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு கொல்கத்தா நிலைமையை கண்காணித்து வருவதாகவும், தேவையான அளவிற்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் தேவைப்பட்டால் அதிக படைகள் அனுப்பத் தயார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.