லண்டனில் இருந்து கும்பமேளா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒரு தம்பதி வந்துள்ளனர். அவர்களின் நகை, பணம் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனை சேர்ந்த NRI குடும்பத்தினர் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக இந்தியாவுக்கு வந்திருந்தனர். அந்த திருமண நிகழ்ச்சியை முடித்த பிறகு, அவர்கள் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். அந்த தம்பதியில் கணவரும், அவரது மனைவியும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு கிளம்பிய நிலையில், அவர்களின் மகளும் மருமகனும் வீட்டில் இருந்தனர்.
இந்த நிலையில், மகளும் மருமகனும் ஒரு வேலைக்காக வெளியே சென்றிருந்த போது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள், 1,400 கிராம் தங்கம், 8,000 பவுண்ட் (இங்கிலாந்து பணம்), ரூ.25,000 (இந்திய பணம்) ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். மேலும், விலை உயர்ந்த வாட்ச்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களும் திருடப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தம்பதிகளின் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.