இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களில் ஒன்றான கொல்கத்தா ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதலில் இந்தியாவின் தலைநகராக இருந்தது. அதன்பின் புது டெல்லி மாற்றப்பட்டது. பல பாரம்பரிய பெருமைகளைக் கொண்ட கொல்கத்தா நகரமானது ஆங்கிலேயேர் ஆட்சி கட்டுப்பாட்டில் இருந்த போது போக்குவரத்துச் சேவைக்காக டிராம் வண்டிகள் நகரம் முழுக்க இயக்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் குதிரை வண்டிகள் மூலம் இயக்கப்பட்டது பின்னர் படிப்படியாக இயந்திரங்களில் மாற்றப்பட்டது. நம்மூர் மினி பஸ்களைப் போல கை பக்கத்து தெருவுக்குச் செல்வதற்குக் கூட இந்த டிராம் வண்டிகள் பெரிதும் பயன்பட்டு வருகின்றன. இன்றும் இந்த டிராம் போக்குவரத்து இயங்கும் உலகின் சில நகரங்களில் கொல்கத்தாவும் ஒன்று. மக்களின் உணர்வுகளுடன் ஊறிப்போன ஒரு போக்குவரத்தாகவே டிராம் இயங்கி வருகிறது.
புதிதாக அறிமுகமாகிறது ஏஐ சியர்ச் எஞ்சின்.. கூகுளுக்கு பாதிப்பா?
நாள்தோறும் இதில் ஆயிரக்கணக்கான மக்கள் அருகாமையில் உள்ள இடங்களுக்குச் செல்வதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக தனி பாதையும் அமைக்கப்பட்டதுள்ளது. கிட்டதட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலாக டிராம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் எப்போதோ டிராம் போக்குவரத்து முடிவுக்கு வந்து விட்டது. இன்று மெட்ரோ, புறநகர் ரயில் சேவை என போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்ட சூழலில் கொல்கத்தாவில் டிராம் போக்குவரத்து சேவையை நிறுத்தப் போவதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஸ்னேகாசிஸ் தெரிவித்திருக்கிறார்.
கொல்கத்தாவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்வதால் அதற்கு இடையூறாக டிராம்களும் இயங்கி வருகின்றன. எனவே டிராம் சேவையை நிறுத்தப் போவதாக அம்மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலுக்கு டிராம்களை மட்டும் குறை சொல்லக் கூடாது என கருத்து தெரிவிக்கின்றனர்.