வங்கி வேலையை ராஜினாமா செய்து விட்டு நாட்டு சர்க்கரை டீ பிசினஸ்.. லட்சாதிபதியான இளம்பெண்..!

  வங்கியில் நல்ல வேலையில் இருந்த இளம்பெண் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டுச் சர்க்கரை டீ பிஸினஸை தொடங்கிய நிலையில், தற்போது அவர் மாதம் ஒன்றுக்கு ஐந்து லட்ச ரூபாய் சம்பாதிப்பதாக…

tea

 

வங்கியில் நல்ல வேலையில் இருந்த இளம்பெண் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டுச் சர்க்கரை டீ பிஸினஸை தொடங்கிய நிலையில், தற்போது அவர் மாதம் ஒன்றுக்கு ஐந்து லட்ச ரூபாய் சம்பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பல்லவி தன்ராஜ் என்ற இளம் பெண், வங்கியில் பணி செய்து கொண்டிருந்தார். ஆனால், அந்த வேலை தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை உணர்ந்தார். இதனை அடுத்து, அவர் வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வெள்ளை சர்க்கரை தேநீருக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை கலந்த தேநீர் வியாபாரம் செய்ய தொடங்கினார்.

அது மட்டும் இல்லாமல், மூலிகை தேநீர், துளசி தேநீர், மசாலா தேநீர், ஏலக்காய் தேநீர், ஆயுர்வேத தேநீர் என விதவிதமான தேநீர்களை அவர் அறிமுகப்படுத்தினார். மேலும், நாட்டுச் சர்க்கரை பிஸ்கட், கிரேவி மசாலா தூள், முருங்கை தூள், கொண்டகடலை பிஸ்கட் போன்ற பல்வேறு ஸ்நாக்ஸ்களையும் அவர் தயாரித்தார்.

தற்போது, அவர் மாதம் 700 முதல் 800 கிலோ நாட்டுச் சர்க்கரை பயன்படுத்தி பிசினஸ் செய்து வருகிறார். இதன் மூலம், மாதம் ஐந்து லட்ச ரூபாய் லாபம் பெற்றுவருவதாக கூறப்படுகிறது. வெள்ளை சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்பதால், நாட்டுச் சர்க்கரை உடலுக்கு நல்லது என்றும், சர்க்கரை நோயாளிகளும் இதை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையை கருத்தில் கொண்டு, மக்களை ஆரோக்கியமான வழியில் மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்லவி தன்ராஜ் இந்த பிசினஸை தொடங்கியதாகவும், தற்போது இது நல்ல லாபத்தை தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரைப் பார்த்து பலரும் நாட்டுச் சர்க்கரை பிஸினஸை செய்யத் தொடங்கியுள்ளனர்.

வங்கி வேலையை தைரியமாக ராஜினாமா செய்து, வெறும் 23 வயதிலேயே சொந்த பிஸினஸ் தொடங்கிய பல்லவி தன்ராஜ், இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.