நேரு, இந்திரா காந்தி காலத்து இந்தியா அல்ல.. இது மோடியின் வலிமையான இந்தியா.. நீ ஒரு அடித்தால், உனக்கு இரண்டு அடி விழும்.. இதுதான் இந்தியாவின் தற்போதைய பாலிசி.. இந்தியாவை புறக்கணித்து எந்த நாடும் இனி செயல்பட முடியாது..!

இந்தியாவின் வெளியுறவு கொள்கை, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இணைக்கும் ஒரு புதிய, வலுவான அணுகுமுறையை மத்திய அரசு கையாண்டு வருகிறது. இது நேருவின் Non-Alignment என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறி, நாட்டின் நலனை…

nehru modi

இந்தியாவின் வெளியுறவு கொள்கை, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இணைக்கும் ஒரு புதிய, வலுவான அணுகுமுறையை மத்திய அரசு கையாண்டு வருகிறது. இது நேருவின் Non-Alignment என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறி, நாட்டின் நலனை மையமாக கொண்ட Multi-Alignment Strategy என்ற பலதரப்பு கூட்டணியை நோக்கி நகர்ந்துள்ளது.

நேருவின் காலக்கட்டத்தில் இந்தியா ஒரு அமைதி தூதுவராக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், உலக அரசியலில் நீங்கள் பலசாலியாக இருந்தால் மட்டுமே உங்கள் குரலுக்கு மதிப்பு இருக்கும் என்ற யதார்த்தம் உள்ளது.

1962-ஆம் ஆண்டு சீனாவிடம் பெற்ற அடிக்கு பிறகு, பல ஆண்டுகள் இந்திய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானது. 1987-இல் நடந்த சுந்தர்ஜி சம்பவத்திலும், 2020-இல் சீனாவை நேருக்கு நேர் எதிர்கொண்டபோதும், இந்தியா தனது வலிமையை காட்டிய பின்னரே எதிர்ப்பாளர்கள் பின்வாங்கினர்.

1971 போரில் இந்திராகாந்தி அம்மையார் பாகிஸ்தானை பிளவுபடுத்தி வங்காளதேசத்தை விடுவித்ததோடு போரை நிறுத்தினார். இருப்பினும், சிம்லா ஒப்பந்தத்தில் போரில் வென்ற பகுதிகளை பேச்சுவார்த்தையில் இழந்தது ஒரு தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. நாம் போரில் ஜெயித்ததையெல்லாம் பேச்சுவார்த்தையில் தோற்றோம் என்பது தான் உண்மை.

ஆனால் தற்போது நீ அடித்தால் நான் அடிப்பேன், எனக்கு ஒரு அடி விழுந்தால் உனக்கு இரண்டு அடி விழாமல் நிற்காது” என்ற துணிச்சலான நிலைப்பாட்டை இந்தியா இன்று வெளிப்படுத்துகிறது. தற்போதைய அரசின் கொள்கை, பொருளாதார வளர்ச்சி, இராணுவ வலிமை மற்றும் வெளியுறவு கொள்கை ஆகிய மூன்றையும் தனித்தனி கொள்கைகளாக பார்க்காமல், ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்த தேசிய நலனை கருத்தில் கொண்ட ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

எந்த நாட்டுடன் உறவு கொள்வது அல்லது விரோதம் கொள்வது என்பது என் நாட்டுக்கு எது தேவையோ, என் நாட்டுக்கு இதனால் என்ன பயன் இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்து மட்டுமே தீர்மானிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.

இந்தியாவை அச்சுறுத்தி வந்த சீனா, இன்று பிரிக்ஸ் மாநாட்டிற்கோ அல்லது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கோ மோடியை தனிப்பட்ட முறையில் அழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளது. இது இந்தியாவின் வலிமையை காட்டுகிறது.

வர்த்தகப்போர் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவிற்கு 114 ஜெட் என்ஜின்களை சப்ளை செய்வதற்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துள்ளது. ஹாலுடன் (HAL) இணைந்து இந்தியாவிலேயே இவை தயாரிக்கப்பட உள்ளன.

இந்தியா ஆயுதங்கள் வாங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதுடன், “எதெல்லாம் உள்நாட்டிலேயே தயாரிக்க முடியுமோ, அதை வெளிநாட்டிலிருந்து வாங்க கூடாது” என்ற கொள்கையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. இதன் விளைவாக, இந்தியாவிலிருந்து ஆயுதங்கள் ஏற்றுமதி என்பது கடந்த ஒருசில ஆண்டுகளில் 4,000 கோடியிலிருந்து ரூ.1 லட்சம் கோடியை தாண்டி மகத்தான வளர்ச்சியை பெற்றுள்ளது.

ரஷ்யா மற்றும் சீனாவின் அழுத்தத்தால், தஜிகிஸ்தானில் உள்ள ஐனி விமான தளத்தை இந்தியா காலி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. ஆப்கானிஸ்தானில் சீனா வந்து செல்வதை இந்தியா விரும்பாததால், அங்கு ஒரு சிறிய கண்காணிப்பு குழுவை நிறுவுவதற்கு இந்தியா முயற்சிக்கிறது. ரஷ்யா தற்போது சீனாவுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தாலும், அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்று கருத முடியாது. ரஷ்யா, சீனாவுக்கு வழங்காத S-400 ஏவுகணை அமைப்பு மற்றும் S-57 போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க தயாராக உள்ளது. எந்த நாடும் அதன் சொந்த நலன் அடிப்படையிலேயே வெளியுறவு கொள்கையை வகுக்கும். எனவே, இந்தியாவை புறக்கணித்து எந்த நாடும் செயல்பட முடியாது என்பதே இன்றைய யதார்த்தமாக உள்ளது.