ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். எனவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நிரந்தரமான தேவை உள்ளது. IRCTC உத்தியோகபூர்வமாக முகவர்களை நியமித்து, முழு நேர வேலை தேவையில்லாமல் உங்களுக்கு மிகச்சிறந்த வருமான வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் ஒரு IRCTC அனுமதி பெற்ற பயணச்சீட்டு முகவராக இருந்தால், ரயில்வே நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களை போலவே, பொதுமக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய உதவலாம். ஆனால், உங்கள் வருமானம் சம்பளமாக இல்லாமல், ஒவ்வொரு டிக்கெட் முன்பதிவுக்கும் கமிஷன் கிடைக்கும்.
AC அல்லாத டிக்கெட் என்றால் ரூ.20 கமிஷன், AC டிக்கெட்டுக்கு ரூ.40 கமிஷன், தட்கல் டிக்கெட் என்றாலும் குறிப்பிட்ட கமிஷன் கிடைக்கும். இதன் மூலம் மாத வருமானம் ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஒரு IRCTC பயணச்சீட்டு முகவராக என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். முதலில் IRCTC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். பின்னர் பதிவு கட்டணம் செலுத்தவும். பதிவு கட்டணம் என்பது 1 வருடத்திற்கு ரூ.3,999
2 வருடத்திற்கு ரூ.6,999 ஆகும். கட்டணம் செலுத்தியவுடன் உங்கள் விவரங்கள் IRCTC மூலம் சரிபார்க்கப்படும். அதன்பின் அங்கீகாரம் கிடைத்ததும், நீங்கள் உடனடியாக முன்பதிவு செய்ய தொடங்கலாம்.
IRCTC முகவராக பதிவு கட்டணம் தவிர கூடுதல் முதலீடு தேவையில்லை. வீட்டிலிருந்தோ, சிறிய அலுவலகம் அமைத்தோ இயங்கலாம். உலகளாவிய விமான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யும் வாய்ப்பும் உண்டு. இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ முகவராக நம்பிக்கையை அதிகரிக்கலாம்
மாணவர்கள், சிறு வியாபாரிகள், பயண முகவர்கள், வீட்டில் இருப்பவர், கூடுதல் வருமானம் தேடும் அனைவருக்கும் இது மிகச்சிறந்த வருமான வாய்ப்பு. குறைந்த முதலீடு, அதிக வருமானம் பெற இதனை முயற்சிக்கலாம்.