முதன்மை சேவைகள், பொருள் கொள்முதல், வாடிக்கையாளர் தொடர்பு, சார்ஜிங் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் தான் அதிக அளவில் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 500 பணியாளர்கள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது மிக குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கையை நிறுவனம் எடுத்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐபிஓ மூலம் பட்டியலிடப்பட்ட ஓலா நிறுவனம், பெரும் அளவில் முதலீட்டாளர்களை கவரவில்லை. இதன் பங்கு விலை 60% வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வாடிக்கையாளர்களின் அடுத்தெருத்த புகார்கள், சமூக வலைதளங்களில் இந்நிறுவனத்திற்கு எதிரான பதிவுகள், பங்குச்சந்தை இழப்பு, ஐபிஓ நஷ்டம் உள்ளிட்டவை காரணமாகத்தான் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது செலவை குறைப்பதற்காக வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை, ஓலா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.