கணவரிடம் கேட்டு சொல்கிறேன்.. பதில் கூறிய அடுத்த நிமிடம் வேலையை இழந்த பெண்..!

  ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் CEO பணிக்காக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்ட நிலையில், “நீங்கள் எப்போது வேலையில் சேர விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு “என் கணவரிடம் கேட்டு சொல்கிறேன்” என்று பதிலளித்தார். இதையடுத்து,…

interview

 

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் CEO பணிக்காக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்ட நிலையில், “நீங்கள் எப்போது வேலையில் சேர விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு “என் கணவரிடம் கேட்டு சொல்கிறேன்” என்று பதிலளித்தார். இதையடுத்து, அவர் உடனடியாக நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனமொன்றின் CEO பதவிக்காக சமீபத்தில் நேர்காணல் நடைபெற்றது. இதில் ஒரு இளம் பெண் தேவையான தகுதிகளுடன் கலந்து கொண்டார். நேர்காணலில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் திருப்திகரமாக பதிலளித்த அவர், இறுதியாக “நீங்கள் எப்போது வேலையில் சேர முடியும்?” எனக் கேட்டவுடன், “என் கணவரிடம் ஆலோசித்து சொல்கிறேன்” என்று பதிலளித்தார். இதையடுத்து, “இந்த வேலைக்கு தகுதியற்றவர்” என கூறி அவரை நிராகரித்தனர்.

இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்த நிலையில், அந்த பெண்ணை நேர்காணல் செய்தவர், “CEO பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால், அவர் சுயமாக முடிவெடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும். ஆனால், அவர் தனது கணவரை சார்ந்திருப்பதால், அந்த பதவிக்கு உகந்தவர் இல்லை” என சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.

இப்பதிவுக்கு ஏராளமான கருத்துக்கள் கிடைத்து வருகின்றன. சிலர், “இது அந்த பெண்ணின் தவறல்ல, சமூக கட்டமைப்பு ஒரு பெண்ணை இவ்வாறு வைத்திருக்கிறது. அலுவலகத்தில் ஒரு பெண் சுயமாக முடிவெடுத்தாலும், வீட்டில் அப்படி செய்ய முடியாத சூழ்நிலை இன்னும் பல இடங்களில் உள்ளது. கணவர், மாமியார் ஆகியோரின் அனுமதியைப் பெற்றே சில விஷயங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பல பெண்கள் உள்ளனர். எனவே, இந்தப் பெண்ணை குறை கூறுவது தவறு” என தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில்,  “CEO பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு. அந்த நிலைமையில் இருக்கும் ஒருவர் எந்த ஒரு முடிவையும் சுயமாக எடுத்தே ஆக வேண்டும்” எனவும், “ஒருவருக்கான தனிப்பட்ட முடிவுகளை கூட சுயமாக எடுக்க முடியாவிட்டால், அவர் ஒரு நிறுவனத்தை எவ்வாறு முன்னோக்கி அழைத்துச் செல்ல முடியும்?” எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விவாதம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.