இந்திய டீன் ஏஜ் இன்ஸ்டா பயனர்களுக்கு மட்டும் சிறப்பு பாதுகாப்பு.. 2 புதிய அம்சங்கள்.. இனி ஏமாற்ற வழியே இல்லை..!

இன்ஸ்டாகிராமின் நேரடி மெசேஜிங் என்று கூறப்படும் DM பிரிவில் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இது இளம் வயதினருக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இளம்பெண் ஒரு இளம் ஆணுடன் உரையாடலை…

instagram

இன்ஸ்டாகிராமின் நேரடி மெசேஜிங் என்று கூறப்படும் DM பிரிவில் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இது இளம் வயதினருக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு இளம்பெண் ஒரு இளம் ஆணுடன் உரையாடலை தொடங்கும்போது, அவர்கள் பின்தொடர்பவராகவோ அல்லது அவர்களை பின்தொடர்பவராகவோ இருந்தாலும், இன்ஸ்டாகிராம் இப்போது பாதுகாப்பு ஆலோசனைகளை காண்பிக்கும். இதுகுறித்த 2 புதிய அம்சங்களை தற்போது பார்ப்போம்.

1. புதிய பாதுகாப்பான DM அம்சங்கள்

இந்த வழிகாட்டுதல்களின்படி, இளம் வயதினர் மற்றவரின் சுயவிவரத்தை கவனமாக படிக்க வேண்டும். மேலும், ஏதேனும் அசௌகரியமாகவோ அல்லது சந்தேகத்திற்குரியதாகவோ தோன்றினால், எதையும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கூடுதலாக, இன்ஸ்டாகிராம் இப்போது சாட் விண்டோவின் மேலே, மற்ற பயனரின் கணக்கு உருவாக்கப்பட்ட மாதம் மற்றும் வருடத்தை காண்பிக்கும். இதன் மூலம் நம்முடன் சாட் செய்பவர் புதிய பயனரா? அல்லது பல வருடங்கள் இன்ஸ்டாவில் இருப்பவரா? என்பது தெரிய வரும். இந்த அம்சத்தின் நோக்கம், மோசடியான அல்லது போலி கணக்குகளை எளிதாக அடையாளம் காண உதவுவதாகும்.

நாம் சாட் செய்யும் நபர் தவறான நோக்கத்தை கொண்டிருப்பது தெரிய வந்தால் உடனே இதற்கென பிரத்யேகமாக இருக்கும் பொத்தானை அழுத்தலாம். இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் ப்ளாக் செய்யப்படுவார்.

2. குழந்தைகள் கணக்குகளுக்கான கடுமையான பாதுகாப்பு அமைப்புகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக பெரியவர்களால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு இப்போது மெட்டாவின் கடுமையான பாதுகாப்பு அமைப்புகள் கிடைக்கும். பொதுவாக பெற்றோர்கள் அல்லது அட்மின்களால் நிர்வகிக்கப்படும் கணக்குகளுக்கு, பின்வரும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புகள் தானாகவே பொருந்தும்:

வலிமையான செய்தி கட்டுப்பாடுகள்
ஆபத்தான கருத்துகளை தரும் மெசேஜ்கள் தடுக்கப்படும்.
பயனரின் ஃபீட்ஸின் மேலே புதிய பாதுகாப்பு எச்சரிக்கைகள்

இந்த குழந்தைகள் கணக்குகளை பெரியவர்கள் நிர்வகிக்கலாம் என்றாலும், ஒரு குழந்தை அதை பயன்படுத்துவதாக தளம் தீர்மானித்தால், அந்த கணக்கு நீக்கப்படும் என்று மெட்டா விளக்கியுள்ளது.

இந்தியாவில் இன்ஸ்டாகிராமின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று என்பதால், இந்த பாதுகாப்பு அம்சங்கள் குறிப்பாக இந்திய குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் ஆன்லைன் அனுபவங்களை மேம்படுத்துவதற்காகும். இந்திய குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இணையத்தை பாதுகாப்பான மற்றும் வயதுக்கு ஏற்ற இடமாக மாற்ற மெட்டா செயல்பட்டு வருகிறது.