இந்திரா காந்தியின் இன்னொரு முகத்தை காட்டிவிட்டீர்கள்.. கங்கனாவுக்கு காஞ்சிபுரம் பட்டுச்சேலை பரிசு..!

  சமீபத்தில் வெளியான எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் இந்திரா காந்தி கேரக்டரில் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனத்தை பெற்றாலும் வசூல் அளவில்…

kangana

 

சமீபத்தில் வெளியான எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் இந்திரா காந்தி கேரக்டரில் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனத்தை பெற்றாலும் வசூல் அளவில் சுமாராகவே இருந்தது.

இந்த நிலையில் நெட்பிளிக்ஸில் இந்த படம் ரிலீஸ் ஆனபோது ஏராளமான மக்கள் இந்த படத்தை பார்த்து ரசித்தார்கள் என்பதும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் கங்கனாவுக்கு காஞ்சிபுரம் சேலை பரிசளித்து ஒரு நெகிழ்ச்சியுடன் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

என் உள்ளமும் உயிரும் ஹிந்துத்துவாவும் பாரத தேசத்திலும் ஆழமாக இணைந்தவை. பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு சுதந்திரம் தேடி கொடுத்த கட்சியாக காங்கிரஸ் போற்றப்பட்டுள்ளது. ஆனால், உண்மை என்னவென்றால், சுதந்திரம் எனும் போர்வையில் கூட, காங்கிரஸ் இந்தியாவை வேறொரு முறையில் அடிமையாக்கியது என்பதை இப்போது அனைவரும் அறிந்து வருகிறார்கள்.

மகாத்மா காந்தியின் பெயரில் பல வருடங்களாக அந்தக் கட்சியின் ஊழலும், மனிதாபிமானமற்ற கொள்கைகளும் கேள்விக்குள்ளாகவில்லை. இன்று, டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்களும் பாஜகவின் எழுச்சியும் காரணமாக உணர்வுகள் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்தில், உங்கள் ‘எமெர்ஜென்சி’ திரைப்படத்தை பார்த்தேன். உங்களுக்கு எனது பாராட்டுக்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், சஞ்சய் காந்தியின் கொடுமைகளையும், இந்திரா காந்தியின் கட்டுப்பாடான ஆளுகையும் மிகவும் திறமையாகவும், துணிச்சலாகவும் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். குறிப்பாக இருண்ட வரலாற்றை மிகவும் சரியாக காட்டியிருக்கிறீர்கள்.

இந்திரா காந்தியின் உண்மையான முகத்தை நாட்டிற்கு காட்டிய உங்களது துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுகள். இந்த வேடத்தை உங்கள் அளவிற்கு திறமையாக யாரும் செய்ய முடியாது என்று நம்புகிறேன். எனது நன்றியும் மரியாதையும் காட்ட, இந்த காஞ்சிபுரம் பட்டு புடவையை உங்களுக்கு பரிசளிக்கிறேன். உங்களது பயமற்ற கதை சொல்லும் பாணி, அரசியல் பார்வைகளை மாற்றும் சக்தியைக் கொண்டது. இதனை வெளிக்கொணர நீங்கள் காட்டிய உறுதி என் மனதை கவர்ந்துவிட்டது. வாய்ப்பு கிடைத்தால், உங்களை நேரில் சந்தித்து நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் முயற்சிகளில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.”

kangana1