அமெரிக்க கொள்கையில் ஏற்பட்ட ஒரு மாற்றம், உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் புவிசார் அரசியல் போட்டிக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது. செப்டம்பர் 24 அன்று, டிரம்ப் நிர்வாகம் H1B விசாக்களுக்கான கட்டணத்தை $5,000-லிருந்து மலைக்க வைக்கும் வகையில் $100,000 ஆக உயர்த்தி அறிவித்தது. இந்த 20 மடங்கு கட்டண உயர்வு, அமெரிக்காவுக்குள் உயர் திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் நுழைவதற்கான வழியைத் திறம்பட அடைத்துவிட்டது.
இந்த விசாவை பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் உயர் திறமை வாய்ந்த பணியாளர்களில் 75% பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். கட்டணத்தின் இந்த அபரிமிதமான உயர்வு, அமெரிக்க கனவுக்கான வழியை பெரும்பாலான இந்திய வல்லுநர்களுக்கு எட்டாக்கனியாக மாற்றியுள்ளது.
அமெரிக்கா இந்த திறமைப் போட்டியில் இருந்து விலகிய நிலையில், உலகெங்கிலும் உள்ள வளர்ந்த நாடுகள் இந்தியாவை நோக்கி தங்கள் பார்வையை திருப்பியுள்ளன. இதற்கு காரணம், இந்த நாடுகள் பல ஆண்டுகளாக மக்கள்தொகையை பெருக்க முடியாமலும், அதிகளவில் திறமையானவர்களை உருவாக்க முடியாமலும் சிரமப்படுகின்றன.
உலகளாவிய தேவை: ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா, சீனா, தென்கொரியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பிறப்பு விகிதங்கள் வெகுவாகக் குறைந்து, வயதான மக்கள் தொகை அதிகரித்து, தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தப் பொருளாதாரங்கள் தேக்கநிலை அச்சுறுத்தலைச் சமாளிக்க உடனடியாக இளம், படித்த, திறமையான பணியாளர்களைத் தேடுகின்றன.
ரஷ்யா 10 லட்சம் இந்தியத் தொழிலாளர்களை ஈர்க்க திட்டமிடுவதாக வெளிப்படையாக பேசியுள்ளது. ஜப்பான், அதன் தொழில்களை தக்கவைக்கவும் முதியோர்களை பராமரிக்கவும் 5 லட்சம் இந்தியர்களை இலக்கு வைத்துள்ளது. ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஷோல்ட்ஸ் போன்ற தலைவர்கள் இந்திய நிபுணர்களை தங்கள் நாட்டுக்கு வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றனர்.
இந்திய வல்லுநர்களுக்கான உலகளாவிய போட்டிக்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன:
1. உள்நாட்டு சம்பளம் உயர்வு: இந்தியா, ஆண்டுக்கு சுமார் 6.5% என்ற வேகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்நாட்டு வேலைவாய்ப்புகளும், ஊதியமும் உயர்ந்து வருகின்றன. இதனால் வெளிநாட்டில் கிடைக்கும் வாய்ப்புகள் இந்தியாவுக்குள்ளேயேயும் கிடைக்கிறது. .
2. மக்கள்தொகை உச்சம்: இந்தியாவின் பிறப்பு விகிதம் வியக்கத்தக்க வேகத்தில் உள்ளது. தற்போது 25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் உச்சத்தில் உள்ளனர். இனிவரும் ஆண்டுகளில், இந்தியாவின் இளம் தொழிலாளர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியர்களின் திறமை: உலகிலேயே மிகப்பெரிய அளவில், ஏற்றுமதி செய்யத் தயாராக இருக்கும் படித்த, திறமையான, இளம் பணியாளர்களை கொண்ட ஒரே தேசம் இந்தியாதான். அடுத்த தலைமுறைக்கான கண்டுபிடிப்பு திறனையும், புவிசார் அரசியல் செல்வாக்கையும், வளமான எதிர்காலத்தையும் இந்திய இளைஞர்கள் பெற்று வருகின்றனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்த போட்டி உச்சத்தில் இருக்கும். அதற்கு பிறகு, இந்திய திறமைகளை பெறுவதற்கான செலவு விண்ணை தொடும். 15 முதல் 20 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியர்களுக்கான அழைப்பு இன்னும் அதிகரிக்க கூடும். உலகம் முழுவதும் இந்தியர்கள் இல்லாவிட்டால் செயல்பட முடியாது என்ற நிலை ஏற்படலாம்..
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
