50% வரி போட்டுக்கோ.. H-1B விசா கட்டண உயர்வும் செய்துக்கோ.. அதுக்கெல்லாம் அசருகிற ஆளில்லை இந்தியர்கள்.. தாய்நாட்டை அமெரிக்காவிட வல்லரசாக்குவோம்.. இந்தியாவை பயமுறுத்த இன்னொருவர் தான் பிறந்து வரனும்.. இந்தியாடா…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிதாக H-1B விசா விண்ணப்பிப்பவர்களுக்கு $100,000 கட்டணம் விதிக்கும் புதிய கொள்கையை அறிவித்துள்ளது, உலகளாவிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கையை ஒரு “மறைமுக வரப்பிரசாதம்” என்று…

usa vs india

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிதாக H-1B விசா விண்ணப்பிப்பவர்களுக்கு $100,000 கட்டணம் விதிக்கும் புதிய கொள்கையை அறிவித்துள்ளது, உலகளாவிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கையை ஒரு “மறைமுக வரப்பிரசாதம்” என்று குறிப்பிட்டுள்ள ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி. காமகோடி, இதன் மூலம் இந்திய இளைஞர்கள் நாட்டிலேயே தங்கி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த புதிய கொள்கை குறித்து கருத்து தெரிவித்த வி. காமகோடி, “இந்த விசா கட்டண உயர்வு ஒரு வகையில் ஒரு மறைமுக வரப்பிரசாதம். அதற்காக நாம் அதிபர் டிரம்புக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.

ஆரம்பத்தில், இந்த $100,000 கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கும், விசா புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என்று செய்திகள் பரவின. ஆனால், இது புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று பின்னர் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த பெரும் தொகை பல இந்திய மாணவர்களை அமெரிக்கா சென்று வேலை செய்வதிலிருந்து தடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவுக்கு செல்லும் மாணவர்கள் பெரும்பாலும் அங்கு படிப்பு முடிந்து வேலைக்கு செல்லவே விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் பெரும் தொகையை செலவிடுகிறார்கள். ஆனால், இந்த புதிய கட்டண உயர்வால், பல திறமையான மாணவர்கள் இந்தியாவில் தங்கி பணிபுரியவும், ஆராய்ச்சி செய்யவும் வாய்ப்பு கிடைக்கும் என்று இயக்குனர் காமகோடி தெரிவித்தார். மேலும், அவர் இந்திய அரசின் ஆராய்ச்சி திட்டங்களை எடுத்துரைத்தார்:

பிரதமரின் ஆராய்ச்சி உதவித்தொகை (PMRF): இந்தத் திட்டம் ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ. 70,000 முதல் ரூ. 80,000 வரையிலான மாத உதவித்தொகையை வழங்குகிறது. இது வரிவிலக்கு பெற்றதுடன், ஒவ்வொரு ஆண்டும் ரூ. 2 லட்சம் கூடுதல் ஆய்வு நிதியையும் வழங்குகிறது.

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF): இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதியளிக்கிறது, இது நாட்டில் புதுமைகளை ஊக்குவிக்கிறது.

இந்தத் திட்டங்கள், இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவிற்கு இணையாகவே ஆராய்ச்சி வாய்ப்புகளை வழங்குகின்றன.

அமெரிக்காவுக்குச் செல்வதற்கான மோகம் குறைந்துவிட்டது என்று குறிப்பிட்ட காமகோடி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐஐடி மெட்ராஸில் பட்டம் பெறும் மாணவர்களில் 5% பேர் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக இந்தியாவில் உள்ள திறமையானவர்களை வேலைக்கு அமர்த்தி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களில் உள்ள தங்கள் அலுவலகங்களில் பணியமர்த்துகின்றன. இது இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

அமெரிக்கா மட்டுமே வேலை தேடும் ஒரே நாடு அல்ல என்றும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களும் இப்போது சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார். இந்த சவாலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, இந்தியா தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மொத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு 50% வரிவிதித்ததால் இந்தியா தனது அமெரிக்க ஏற்றுமதிக்கு பதிலாக மாற்று நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் யுத்தியை கடைப்பிடித்தது. தற்போது நிலைமை சீராகி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ததை விட அதிக அளவு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தை செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் H-1B விசா கட்டண உயர்வும் இந்தியாவுக்கு ஒருவகை நன்மைகளையே கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மாணவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் தங்கி வேலை செய்வதற்கான வழிவகை வகுக்கும் என்பதும் அல்லது வெளிநாடு சென்றே ஆக வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு ஜெர்மனி, கனடா, மெக்ஸிகோ, சீனா உள்ளிட்ட நாடுகள் கதவை திறந்து உள்ளதால் அங்கு சென்று வேலை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே அமெரிக்காவை வைத்து இந்தியாவோ, இந்தியர்களோ இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து நிரூபிப்போம் என்பதுதான் இந்தியர்களின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது.