மேலும், பிபிசி எதிர்காலத்தில் செய்தி வெளியிடுவதில் மிகவும் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்றும், இந்திய அரசு அதன் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசி வெளியிட்ட கட்டுரையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை ‘மில்லிடண்ட் தாக்குதல்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்பதை மறைக்கவும், காஷ்மீரில் நிலவும் உண்மை நிலையை மாற்றிக்காட்டவும் பிபிசி தொடர்ந்து முயற்சி செய்கிறது என்பதற்காக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அதே கட்டுரையில் பிபிசி, காஷ்மீரில் நடந்த மில்லிடண்ட் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகள் எடுத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது. ஆனால் காஷ்மீரில் நடந்த மோசமான தாக்குதலை குறைத்து காட்டியுள்ளது. மேலும், பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை கொன்றதை ‘துப்பாக்கி கும்பல் தாக்குதல்’ என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
பிபிசி இவ்வாறு நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் பல முறை, பிபிசியும் பிற மேற்கு ஊடகங்களும் இந்தியாவை பற்றிய செய்திகளை, குறிப்பாக காஷ்மீர் தொடர்பான விவகாரங்களில், ஒருதலைபட்சமாக செய்தி வெளியிட்டு வந்துள்ளன.
2019ஆம் ஆண்டு 370வது அரசியல் சிறப்பு விதி நீக்கப்பட்டபின், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலவரம் குறித்து தவறான தகவல்களை பிபிசி தொடர்ந்து பரப்பி, உண்மைகளை தவறாக முன்வைத்து, பயங்கரவாதத்தை சிறியதாக காட்டி, பிரிவினைவாத குரல்களை உயர்த்திக் காட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.