வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்கும் செய்தி, சர்வதேச அரசியலில், குறிப்பாக இந்தியாவை மையமாக வைத்து ஒரு பெரிய சதியின் பின்னணியை கொண்டிருப்பதாக பரவலாக கருதப்படுகிறது. ஹசீனாவின் மீதான இந்த தீர்ப்பு, அமெரிக்கா மற்றும் சீனாவின் மறைமுக ஆதரவுடன், வங்கதேசத்தில் ஆட்சியை பிடித்த யூனுஸ் தலைமையிலான தற்போதைய ஆட்சியாளர்களின் சதியாக பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி நாட்டில் வெடித்த மக்கள் போராட்டத்தின் காரணமாக, ராணுவத் தளபதி வக்காருஸ்ஸமானின் பாதுகாப்பில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். தற்போது அவர் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்காவில் நடந்த போராட்டத்தில், ஆறு போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஷேக் ஹசீனாவும், அவரது உள்துறை அமைச்சர் அசாதுன் சமான் கான் கமலும் காரணம். இவர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறி, ஐந்து பிரிவுகளின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
78 வயதான ஷேக் ஹசீனா, இந்த தீர்ப்பு “அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் ஒருதலைப்பட்சமானது” என்று நிராகரித்துள்ளார். தீர்ப்பு வந்த 30 நாட்களுக்குள் அவர் சரணடைய வேண்டும் என்று வங்கதேச ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதன் நோக்கம், அவரை குற்றவாளியாக சித்தரித்து, அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்தியாவை சர்வதேச அளவில் அழுத்தத்திற்கு உள்ளாக்குவதே ஆகும் என்று கருதப்படுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் வாங்குவதில் சர்வதேச அழுத்தத்தை மீறி செயல்பட்டதால், இந்தியாவை வளைக்க அமெரிக்கா, சீனா ஆகியவை சேர்ந்து இந்த சதித் திட்டத்தை தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் கூட, ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்ததை விமர்சிக்கும் அளவுக்கு சென்றுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள தற்போதைய ஆட்சியாளர்கள், ஷேக் ஹசீனாவின் பிரதான அரசியல் போட்டியாளரான முகமது யூனுஸ் அவர்களின் கைப்பாவையாக செயல்படுவதாக கூறப்படுகிறது. யூனுஸ், அமெரிக்காவின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்து, எதிர்வரும் பிப்ரவரி தேர்தலுக்கு முன்பாக ஹசீனாவை ஒழித்துக்கட்ட துடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரி வங்கதேச அரசு முறைப்படி இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், பின்வரும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தியா எந்தவிதமான உறுதிப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. ஷேக் ஹசீனாவுக்கு எதிரான தீர்ப்பை இந்தியா கவனித்து வருகிறது. இது சம்பந்தமாக அனைத்து தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று மட்டும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தப்படி, குற்றம் சாட்டப்பட்ட செயல் இரு நாடுகளிலும் குற்றமாக இருந்தால் மட்டுமே நாடு கடத்தல் சாத்தியம். ஹசீனாவின் உத்தரவு நிர்வாக ரீதியானது என்பதால், இந்தியாவில் அது குற்றமாக கருதப்படாது. இந்தக் குற்றம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று நிரூபிக்கப்பட்டால், நாடு கடத்தும் கோரிக்கையை நிராகரிக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு என்று ஒப்பந்தத்தின் விதி 6 கூறுகிறது.
இந்திய நாடு கடத்தல் சட்டம் 1962, சூழ்நிலையை பொறுத்து நாடு கடத்த கோரும் முடிவை நிராகரிக்கும் அதிகாரத்தை இந்திய அரசுக்கு வழங்குகிறது. இதன் அடிப்படையில், ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது சட்டப்படி தவறல்ல என்றும், வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரிக்கும் அதிகாரம் இந்தியாவுக்கு உள்ளது என்றும் உறுதியாகிறது.
வங்கதேச ஆட்சியாளர்களின் ஒருசிலர், ஷேக் ஹசீனாவை வெளியேற்றாவிட்டால் ராணுவத்தை அனுப்ப போவதாகக் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வங்கதேச ஆட்சியாளர்கள், இந்தியாவுடனான 22 கி.மீ. அகலமுள்ள “சிக்கன் காரிடாரை” அடைத்து வடகிழக்கு மாநிலங்களை கையகப்படுத்தலாம் என்று பேசியதாக கூறப்படுகிறது. நீங்கள் ஏதேனும் தவறு செய்தால், அந்த 22 கி.மீ. காரிடார் 220 கி.மீ அகலமாக மாறிவிடும்” என்று அஜித் தோவல் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், “டாக்காவில் உள்ள உங்கள் வங்கதேச கொடிக்குப்பதிலாக, இந்திய மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கும்” என்றும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
வங்கதேச நாட்டை உருவாக்கியதே இந்திய ராணுவம் தான். ஆனால் அந்த நன்றி இல்லாமல் யூனுஸ் போன்ற அமெரிக்க கொத்தடிமைகளின் அழுத்தத்திற்கு இந்தியா அஞ்சாது என்பதையும் தேவைப்பட்டால் உறுதியான நடவடிக்கை எடுக்க தயங்காது என்பதையும் இந்த எச்சரிக்கை உணர்த்துகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
