சீனாவை கட்டுப்படுத்த இந்தியாவை பயன்படுத்துவதா? அதெல்லாம் வேற ஆள்கிட்ட வச்சுக்கோ டிரம்ப்.. மோடியிடம் உங்க பாச்சா பலிக்காது.. அமெரிக்காவுக்கு ஆப்பு வைக்க போவது பிரிக்ஸ் தான்.. ஞாபகம் வச்சுக்கோ..!

கடந்த ஆறு மாதங்களில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வெளியுறவு கொள்கையை முழுவதுமாக மாற்றியுள்ளார். வழக்கமான அணுகுமுறைகள் கைவிடப்பட்டு, “டிரம்பியன் தர்க்கம்” இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது அவரது இந்திய கொள்கையில் மிக தெளிவாக தெரிகிறது.…

modi trump

கடந்த ஆறு மாதங்களில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வெளியுறவு கொள்கையை முழுவதுமாக மாற்றியுள்ளார். வழக்கமான அணுகுமுறைகள் கைவிடப்பட்டு, “டிரம்பியன் தர்க்கம்” இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது அவரது இந்திய கொள்கையில் மிக தெளிவாக தெரிகிறது.

அமெரிக்காவும் இந்தியாவும் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்ததில்லை. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது, அதே சமயம் இந்தியா மாஸ்கோவுடன் நெருக்கமாக இருந்தது. பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு, 1990களில் தான் இந்திய, அமெரிக்க உறவுகள் மேம்பட தொடங்கின.
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் வரலாற்று தடைகளைத் தாண்டி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த முயற்சி செய்தன. இந்த சூழலில்தான் டிரம்ப் 2.0 மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்தார். இந்தியா அவரது வருகையை கண்டு மகிழ்ச்சி அடைந்தது. ஆனால், அதற்கு பதிலாக இந்தியாவுக்கு என்ன கிடைத்தது?

இந்தியா கடுமையான வரிகளை எதிர்கொள்கிறது. ரஷ்ய எண்ணெயை வாங்குவதால் விதிக்கப்பட்ட 25% வரி மற்றும் பொதுவான வர்த்தகத்தில் விதிக்கப்பட்ட 25% வரி என மொத்தம் 50% வரிகளை இந்தியா எதிர்கொள்கிறது. டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் தினமும் இந்தியாவை தாக்கிப் பேசுகின்றனர். உக்ரைனை ஆக்கிரமித்தது ரஷ்யா அல்ல, இந்தியாதான் என்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

ஆனால், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிக்கி ஹேலி, ஜான் போல்டன் போன்ற முக்கிய அமெரிக்க விமர்சகர்களும் முன்னாள் அதிகாரிகளும் ட்ரம்ப்பின் கொள்கையை வெளிப்படையாக எதிர்க்கின்றனர். 2024இல் ட்ரம்ப்பின் ஐக்கிய நாடுகள் சபையின் தூதராக இருந்த நிக்கி ஹேலி, இந்தியாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்துள்ள கொள்கை ஒரு மிகப்பெரிய பேரழிவு” என்று கூறியுள்ளார். இந்தியா ஒரு மதிப்புமிக்க, சுதந்திரமான மற்றும் ஜனநாயக கூட்டாளியாக நடத்தப்பட வேண்டும், சீனாவை போன்ற எதிரியாக அல்ல. ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்திற்கு ஒரு தடுப்புக்கட்டையாக இருக்கக்கூடிய ஒரே நாடான இந்தியாவுடனான 25 ஆண்டுகால உறவு வேகத்தை சீர்குலைப்பது ஒரு பெரிய பேரழிவாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.

குறுகிய காலத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா தேவை. அதன் விநியோக சங்கிலிகளை சீனாவிலிருந்து மாற்றுவதற்கு இந்தியா அவசியம். நீண்ட கால நோக்கில், சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு இந்தியா தேவை. சீனாவின் லட்சியங்கள் நிறைவேறாமல் இருக்க வேண்டும் என்றால், இந்தியாவின் சக்தி வளர வேண்டும். கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள சீனாவை போலன்றி, ஜனநாயக இந்தியாவால் ஏற்படும் வளர்ச்சி சுதந்திர உலகிற்கு அச்சுறுத்தல் அல்ல.” என்றும் அவர் தெரிவித்தார்.

டிரம்பின் கடந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டனும் டிரம்பின் தவறான கொள்கை குறித்து எச்சரிக்கை விடுத்துள்லார் அவர், ’ரஷ்ய எண்ணெயை வாங்கும் இந்தியாவுக்கு மட்டும் “ட்ரம்ப் வரி விதித்தது, அதே நேரத்தில் அதை செய்யும் சீனாவுக்கு வரி விதிக்காதது, இந்தியாவை சீனா, ரஷ்யாவின் நட்பை நோக்கி தள்ளியிருக்கலாம். ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த கவனக்குறைவு ஒரு தற்காலிக தவறு” என்கிறார். அவர் இந்த வரிகளை விளக்க முடியாதவை என்றும், இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

டிரம்பின் வரி தாக்குதல்கள் இருந்தபோதிலும், இந்தியா அமைதியாகவே இருந்துள்ளது. எந்த ஆவேசமான பதில்களையும் தரவில்லை. மாறாக, இந்தியா சீனா மற்றும் ரஷ்யாவுடன் தனது ஈடுபாட்டை அதிகரிப்பது போன்ற செயல்கள் மூலம் பதிலளித்துள்ளது. இந்த புதிய அணுகுமுறை அமெரிக்காவை எதிர்க்க இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கையை காட்டுகிறது’ என்றார்.

நிக்கி ஹேலி மற்றும் ஜான் போல்டன் போன்றோர் ஒரு உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தியா யாருடைய சதுரங்க விளையாட்டிலும் ஒரு காயாக இல்லை. சீனாவை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு பலமான சக்தியாக இருப்பதற்கோ இந்தியா இல்லை. இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்பது ஒரு உலகளாவிய சுயாட்சி ஆகும். புது டெல்லி அனைத்து முக்கிய உலக சக்திகளுடனும் இணைந்து செயல்படுகிறது, அதில் அமெரிக்காவும் அடங்கும். ஆனால், அமெரிக்க கூட்டணியில் சேர இந்தியா தயாராக இல்லை.

இந்தியா ரஷ்யாவையோ, BRICS நாடுகளையோ, அல்லது வளர்ந்து வரும் நாடுகளையோ விட்டுவிட போவதில்லை. ஒவ்வொரு உறவையும் அதன் தகுதியின் அடிப்படையில் இந்தியா அணுகுகிறது. ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் அமெரிக்கா இந்தியாவை தாக்குவதும், பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவதும் போன்ற பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்துவிட்டன. அந்த மோசமான அனுபவத்திலிருந்து மீண்டுவர 25 ஆண்டுகள் ஆயின. ஆனால், டொனால்ட் டிரம்ப் காரணமாக, நாம் மீண்டும் பழைய இடத்திற்கே வந்துவிட்டோம். இனி மீண்டும் அமெரிக்காவுடன் நட்பை புதுப்பிக்க வாய்ப்பு இல்லை. டிரம்புக்கு அடுத்து வரும் அமெரிக்க அதிபர் இந்தியாவுடன் நட்பை புதுப்பிக்க விரும்பினாலும், அது நம்பகத்தன்மை உடன் இருக்குமா? என்று தான் இந்தியா யோசிக்கும்.