கடந்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2020 முதல் 2024 வரை, இந்தியாவில் 93,000 டன்களுக்கும் அதிகமாக யுரேனியம் வளங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆந்திராவில்தான் அதிக அளவில் யுரேனியம் கிடைத்துள்ளதாகவும், அதனை அடுத்து ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் கர்நாடக மாநிலங்களில் யுரேனியம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திராவில் மட்டும் மொத்தம் 60,000 டன் யுரேனியம் கிடைத்துள்ளதாகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் 27,000 டன், ராஜஸ்தான் மற்றும் கர்நாடக மாநிலங்களில் 5,000 டன்களுக்கு மேல் யுரேனியம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் இன்னும் யுரேனியம் வளங்கள் இருக்கும் இடங்களை கண்டுபிடிப்பதற்கான திட்டங்கள் விரிவாக்கப்படும் என்றும், உலக அளவில் யுரேனியம் மிகப்பெரிய தேவை உள்ள பொருள் என்பதால், இந்தியாவுக்கு யுரேனியம் என்பது ஒரு மிகப்பெரிய புதையலாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள யுரேனியம் வளங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்படுமானால், அதன் உற்பத்தி திறன் மில்லியன் கணக்கான டன்களாக இருக்கும் என்றும், இதன் மூலம் இந்தியா ஒரு மிகப்பெரிய வல்லரசாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது வந்துள்ள தகவலின் படி, ஜார்கண்ட் மாநிலத்தில் யுரேனியம் வளம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வளம் இந்தியாவின் நீண்டகால அணு எரிபொருள் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
தங்கம் மற்றும் கச்சா எண்ணெயை விட யுரேனியம் விலைமிக்கதாகும் என்றும், அணுமின்சாரம் தயாரிக்கவும், அணு ஆயுதங்கள் தயாரிக்கவும் யுரேனியம் முக்கிய மூலப்பொருள் என்பதால், உலக அளவில் இதற்கான தேவை இனி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
எனவே, உலகின் முக்கிய நாடுகள் இந்தியாவிலிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.