அமெரிக்கா இதுவரை பாராத தோல்வி.. இந்தியா இதுவரை கண்டிராத எழுச்சி.. எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதை எங்களால் சமாளிக்க முடியும்.. டிரம்புக்கு டைரக்ட் மெசேஜ் கொடுத்த மோடி..

“எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதை தாங்கிக்கொள்ளும் நமது திறனை நாம் தொடர்ந்து வளர்த்துக்கொள்வோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், உலகில் தற்போது பொருளாதார…

modi trump 1

“எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதை தாங்கிக்கொள்ளும் நமது திறனை நாம் தொடர்ந்து வளர்த்துக்கொள்வோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், உலகில் தற்போது பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்ட அரசியல் மேலோங்கி வருவதாகவும், அதை தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

சிறு தொழில்கள் மற்றும் விவசாயிகளின் நலன்கள் முக்கியம்

காந்தியடிகள் பிறந்த இந்த புனித பூமியில் இருந்து, நாட்டின் சிறு தொழில் முனைவோர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆகியோருக்கு உறுதியளிக்கிறேன். மோடியை பொறுத்தவரை, உங்கள் நலன்களே மிக முக்கியமானவை. சிறு தொழில் முனைவோர்கள், விவசாயிகள், மற்றும் கால்நடை வளர்ப்போர் நலன்களுக்கு எனது அரசு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது” என்றும் அவர் உறுதியளித்தார்.

தற்சார்பு இந்தியாவுக்கு குஜராத் தரும் உத்வேகம்

“தற்போது, ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்திற்கு குஜராத்திலிருந்து அதிக சக்தி கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக நாங்கள் மேற்கொண்ட கடின உழைப்பே இதற்கு பின்னால் உள்ளது. இந்தத் திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, பல்வேறு துறைகளில் தன்னிறைவை அடைவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த உரை, உள்நாட்டுத் துறைகளுக்கு அரசு அளிக்கும் ஆதரவையும், எதிர்காலச் சவால்களைச் சமாளிக்கும் அதன் உறுதியையும் எடுத்துக்காட்டுகிறது.