அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவு சிக்கலான சூழலில் இருக்கும் நிலையில், அமெரிக்காவின் இரகசிய அரசியல் மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு அமைந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும், தான் தனிப்பட்ட முறையில் அழுத்தங்களை சமாளிக்க தயாராக இருப்பதாகவும் மோடி கூறியது, அமெரிக்க உளவுத்துறையான CIA-வை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உலகத் தலைவர்களின் படுகொலைகளும், அமெரிக்காவின் பங்கும்
அமெரிக்கா வெளிநாடுகளில் எவ்வாறு இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அந்த நாடுகளை சீர்குலைக்கிறது என்பதற்கு, பல உதாரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
வெனிசுலா: 2024-இல் வெனிசுலா அதிபர் மதுரோவைக் கொலை செய்ய CIA சதி செய்ததாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஃபிடல் காஸ்ட்ரோ: 1960 முதல் 2000 வரை கியூபாவின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவை 638 முறை படுகொலை செய்ய CIA முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. விஷம் தடவிய சுருட்டு, 90 கிலோ வெடிபொருள் போன்றவற்றை பயன்படுத்தி கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.
முஹம்மது கடாஃபி: லிபியாவின் தலைவர் கடாஃபி-இன் படுகொலைக்கு அமெரிக்கா ஆதரவளித்த கிளர்ச்சியாளர் குழு ஆதரவு கொடுத்தது.
சதாம் உசேன்: ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் மீதான வழக்கு மற்றும் மரண தண்டனை, அமெரிக்காவுடன் அவருக்கு இருந்த மோதலின் விளைவாகவே ஏற்பட்டது.
ஷேக் முஜிபுர் ரஹ்மான்: அமெரிக்காவுக்கு வங்காளதேசத்தில் ஒரு ராணுவத் தளத்தை அமைக்க ரஹ்மான் மறுத்ததால், 1975-இல் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையில் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஸியா மற்றும் CIA ஏஜென்ட்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜீவ் காந்தி படுகொலையும், சி.ஐ.ஏ. ஆவணமும்
ராஜீவ் காந்தி படுகொலை குறித்து ஒரு தகவலும் உண்டு. 1986-இல் தயாரிக்கப்பட்ட, ‘இந்திராவுக்குப் பிறகு இந்தியா’ என்ற தலைப்பிலான CIA-இன் ஆவணம் ஒன்று, ராஜீவ் காந்தி ஒரு சீக்கியர் அல்லது காஷ்மீரி முஸ்லிமால் 1989-க்கு முன்னர் படுகொலை செய்யப்படுவார் என்றும், அதன் பிறகு இந்தியாவில் கலவரங்கள் வெடிக்கும் என்றும் கணித்துள்ளது. மேலும், புதிய அரசு ரஷ்யாவுக்கு எதிரான கொள்கைகளை உருவாக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணம், ராஜீவ் காந்தி படுகொலை குறித்த முன் அறிவு அல்லது அதில் CIA-இன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இந்தியாவின் பதில்
அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டாலும், அதன் இரகசிய நடவடிக்கைகளில் ஒரு கொடூரமான பக்கம் உள்ளது என்றே கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்தியாவுக்கு அதன் சொந்த உளவுத்துறையான ‘ரா’ இருப்பதையும், இந்தியா எளிதில் பணியாது என்பதையும் அமெரிக்கா குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இதை தான் பிரதமர் மோடி சுட்டிக்காட்டி, அமெரிக்க வரி விதிப்பிற்கு ‘நாடும் தயார், நானும் தயார்’ என தனது உயிருக்கு இருக்கும் ஆபத்தை மறைமுகமாக தெரிவித்தார். அதேபோல் பாஜக கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கவும்வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
