இனி EV-யிலும் கலக்கப் போகும் ஹோண்டா ஆக்டிவா.. அட்டகாசமான டிசைனா இருக்கே..!

By John A

Published:

20 வருடங்களுக்கு முன்பாக பெண்களின் மனம் கவர்ந்த ஸ்கூட்டராக டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி பெப் இருசக்கர வாகனம் சக்கைப் போடு போட்டது. அதிலும் பிங்க் நிற வாகனத்திற்கு மவுசு அதிகம். இப்படி பெண்களின் மனம் கவர்ந்த இருசக்கர வாகனமாக வலம் வந்த ஸ்கூட்டி பெப் பைக்குக்கு சவால் விடும் வகையில் அதிக இடம், பிக்கப், ஸ்டைலிஷ் என அனைத்திலும் சவால் விடும் வகையில் போட்டியாக இறங்கியதுதான் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா வாகனம்.

இன்று இந்திய சாலைகளில் ஸ்கூட்டி பெப் எந்த அளவுக்கு ஓடிக் கொண்டிருக்கிறதோ அதனை மிஞ்சும் வகையில் ஹோண்டா ஆக்டிவா சாலைகளை ஆக்கிரமித்துள்ளது. பெண்களுக்கு மட்டுமின்றி, முதியவர்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என அனைவரின் விருப்பமான வாகனமாக மாறி கலக்கியது ஹோண்டா ஆக்டிவா.

எந்த நாட்டில் பெண்களுக்கு எவ்ளோ பணி நேரம் தெரியுமா? பாவம் இந்தியப் பெண்கள்..

தற்போது இதேபோன்று ஒவ்வொரு பைக் நிறுவனமும் வேறு வேறு ஸ்டைல்களில் நவீன வசதிகளுடன் பைக்குகளை அறிமுகம் செய்து வரும் நிலையில் ஆக்டிவாவும் போட்டிக்கு நானும் ரெடி என்பது போல் தன்னைத் தானே மெருகேற்றி இன்னும் ஸ்டைலிஷாக இந்திய சாலைகளை ஆக்கிரமிக்கப் போகிறது. அதுவும் எப்படி தெரியுமா பெட்ரோல் இல்லாமல் எலக்ட்ரிக் பைக் வடிவில்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை மளமளவென அதிகரித்து வரும் வேளையில் விழித்துக் கொண்ட ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா பைக்கையும் இனி மின்சாரத்தில் இயங்கும் வகையில் தயாரித்துள்ளது. தற்போது ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இதுகுறித்த விலை விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்த வருடம் மார்ச் மாதம் விற்பனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இதன் விலையானது ரூ. 1லட்சமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இருசக்கர வாகன விற்பனையில் தற்போது ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் வாகனத்திற்கு நிகராக ஹோண்டா சைன் பைக் விற்பனையும் முன்னனியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா ஹோண்டாதான்.