இதுகுறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது, இதில் ஹனியா அமீரின் ரசிகர்கள் அவருக்கு வாட்டர் பாட்டில்களால் நிரப்பப்பட்ட பெட்டியை அனுப்புவதை காண முடிந்தது. அந்த பெட்டியில் “To Hania Aamir. Rawal Pind. Punjab, Pakistan. From India” என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை ஹனியா அமீரின் இந்திய ரசிகர்கள் மீம் நோக்கத்துக்காக உருவாக்கியுள்ளனர். இந்த மீம்க்கு கலவையான விமர்சனங்கள் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர், ஹனியா அமீர் தான் பாகிஸ்தானில் இருந்து கொண்ட அந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த முதல் நபர் என்பதை குறிப்பிடுவது அவசியம். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில் “எங்கு தாக்குதல் ஏற்பட்டாலும் அது தவறு தான். சமீபத்திய நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட பலியானவர்களுக்காக என் இதயம் அழுகிறது. வலி, துக்கம் அடைகிறது.
“பரிதாபமான உயிர்கள் இழக்கப்படும் போது, அந்த வலி அவர்களுக்கு மட்டும் அல்ல, அது நமக்கும் உண்டாகும். எங்கு இருந்தாலும், துக்கம் ஒரே மொழியில் பேசுகிறது. நாம் எப்போதும் மனிதத்துவத்தை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஹனியா அமீர், தில்ஜித் தோசாஞ்சுடன் ‘சர்தார் ஜி 3’ திரைப்படத்தில் இணைவதாக பரப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அவர் இந்த திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் பிரிட்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், சமீபத்திய தகவல்களின்படி ஹனியா நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதில் வேறொரு நடிகையை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
