இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் என்பது பல ஆண்டுகளாக சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. மதுவிலக்கு அமலாக்கத்துறை, போதைப் பொருள் ஒழிப்புத் துறை என பல வகைகளில் துறைகள் இருந்து கட்டுப்படுத்தப்பட்டாலும் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இளைஞர்களை சீரழித்து வருகின்றன.
பூரண மதுவிலக்கு குறித்து மாநில அரசுகள் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னாலும், ஆட்சியில் அமர்ந்ததும் பேசியதை மறந்து விடுகின்றனர். ஏனெனில் அந்த அளவிற்கு பணம் புழங்கும் கள்ளத் தொழிலாக போதைப் பொருட்கள் கடத்தல் இருந்து வருகிறது.
மாநிலம் விட்டு மாநிலம், நாடுவிட்டு நாடு என போதைப் பொருட்கள் கடத்துவோர் ஒரு பெரிய நெட்வொர்க்காக செயல்பட்டு வருகின்றனர். மேலும் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தினை போதைப் பொருள் கடத்தலுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். நாட்டில் முதல் பூரண மதுவிலக்கினை அமல்படுத்திய மாநிலமாக குஜராத் திகழ்கிறது.
இப்படி காந்தி பிறந்த மண்ணில் மதுவினால் இளைஞர் சமுதாயம் சீரழியக் கூடாது என அம்மாநில அரசு மதுவிலக்கினை தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. மேலும் போதைப் பொருள் கடத்தலை ஒடுக்கும் விதமாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்றுதான் போதைப் பொருள் கடத்தல் பற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் போலீஸ் இன்பார்மர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டு வருகிறது.
அவர் கவனக்குறைவால தான் நடந்தது.. கடவுள் மேலயே வழக்கு.. நீதிபதி தீர்ப்பு தான் தலைசுத்த வெச்சுடுச்சு..
இதுவரை போலீஸ் இன்பார்மர்கள் தெரிவித்த தகவலின் பேரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதன்படி குஜராத்தில் கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் பற்றி தகவல் தெரிவித்த சுமார் 970 போலீஸ் இன்பார்மர்களுக்கு ரூ. 11 கோடிக்குமேல் சன்மானம் வழங்கியுள்ளது குஜராத் அரசு.
போலீசாருக்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் தகவல் தெரிவிக்கும் நபருக்கு ரூ. 2500 தரப்படுகிறது. இதுமட்டுமன்றி பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பில் 20% பரிசாக வழங்கும் திட்டத்தினையும் குஜராத் அரசு செயல்படுத்தி வருகிறது.
குஜராத்திலிருந்து வளைகுடா நாடுகள், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு எளிதில் செல்லலாம் என்பதால் கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் சர்வ சாதாரணமான ஒன்று.