மறைந்த கணவருக்காக தனியாக பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி.. திடீரென வந்து நின்ற இளைஞர்.. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..

இந்த உலகத்தில் மற்ற குடும்ப உறவுகளை தாண்டி அதிகம் நெருக்கமாகவும் நீண்ட காலம் நிலைத்து நிற்க கூடியதாகவும் இருப்பது கணவன் மனைவி உறவு தான். தாய், தந்தை, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என யாரை நாம்…

grandson surprise grandmother

இந்த உலகத்தில் மற்ற குடும்ப உறவுகளை தாண்டி அதிகம் நெருக்கமாகவும் நீண்ட காலம் நிலைத்து நிற்க கூடியதாகவும் இருப்பது கணவன் மனைவி உறவு தான். தாய், தந்தை, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என யாரை நாம் எடுத்துக் கொண்டாலும் அவர்களுடன் சிறந்த உறவு இருந்தாலும் மிக அருகிலேயே அல்லது நெருக்கமாக இருக்குமா என்று கேட்டால் பல பேருக்கு அது சந்தேகம் தான். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி எப்போதுமே உடன் இருக்கும் ஒரு உறவாக பார்க்கப்படுவது கணவன் மனைவி உறவு தான்.

ஆயிரம் சண்டைகள் வந்தாலும் எத்தனை முறை பிரிவதாக தெரிவித்தாலும் ஒருவரை விட்டு ஒருவர் பல மணி நேரங்கள் சில மணி நேரம் கூட இருக்க முடியாத ஒரு சூழல் பல தம்பதிகளுக்கு இடையே உள்ளது. வெளியே இருந்து பார்ப்பதற்கு மிக சாதாரணமாக உறவாக அது தெரிந்தாலும் அவர்களுக்கிடையே இருக்கும் அந்த உன்னதமான உணர்வை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின் யாராவது ஒருவர் திடீரென மறைந்து விட்டால் அதற்கு பின் இருக்கும் அந்த வெற்றிடத்தை குடும்ப உறுப்பினர்கள் யார் நினைத்தாலும் நிரப்பி விட முடியாது.

தம்மை விட்டு மறைந்த அந்த நபரின் நினைவுகளோடு அடுத்த சில ஆண்டுகள் அந்த இணையும் வாழ்ந்து மறைய வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இப்படி கணவன், மனைவி உறவுக்கிடையே இருக்கும் விஷயங்களை வெறும் மிக எளிதில் கடந்து செல்லவும் முடியாது. அப்படி ஒரு சூழலில் மறைந்து போன தனது கணவரின் பிறந்த நாளில் தனியாக அதை கொண்டாட நினைத்த மூதாட்டி ஒருவருக்கு கிடைத்த சர்ப்ரைஸ் தொடர்பான செய்தி தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

இது தொடர்பாக இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் மூதாட்டி ஒருவர் மறைந்து போன தனது கணவரின் பிறந்தநாளுக்காக தனியாக உணவகம் ஒன்றில் அமர்ந்து கொண்டு அதனை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் வாலிபர் ஒருவர் அங்கே வந்து பொக்கே கொடுக்க அந்த மூதாட்டியோ ஒரு நிமிடம் மெய்சிலிர்த்தும் போகிறார்.

அந்த இளைஞர் அந்த மூதாட்டியுடைய பேரன் என தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் தனியாக தனது தாத்தாவின் பிறந்த நாளை கொண்டாடும் பாட்டியை ஏங்கிப் போக விடாமல் அதனை இன்னும் சிறப்பாகக்குவதற்காக சுமார் 11 மணி நேரம் பயணம் மேற்கொண்டு அங்கே வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. இன்று வயதாகி சுருங்கிப் போன பலரையும் அவர்களது பேரப்பிள்ளைகள் சாதாரணமாக பார்ப்பதுடன் அப்படியே ஒதுக்கி வைக்கத் தான் பார்க்கிறார்கள்.

ஆனால் இந்த பேரனோ கணவனை மறைந்து தனியாக நிற்கும் பாட்டிக்காக செய்த விஷயம் தற்போது உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.