இதனை தொடர்ந்து, போலீசார் லாலாவை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையின் போது, சிறுமியை கடத்தி கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும், சிறுமியின் கழுத்தில் கோடாலியால் வெட்டியதாகவும், அதிலிருந்து வெளியேறிய ரத்தத்தை தனது வீட்டின் அருகில் உள்ள கோவில் படிக்கட்டுகளில் அர்ப்பணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர குற்றத்திற்கான நோக்கம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், இது நரபலி சம்பவமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், லாலா ஒரு துர் தேவதைகளுக்காக சடங்குகளை செய்யும் நபராக இருக்கலாம், அல்லது மந்திரவாதியாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அவர் மனநல நோயாளியாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், லாலா தற்போது கைது செய்யப்பட்டு, கொலை மற்றும் ஆட்கடத்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வயது சிறுமியின் கழுத்தை வெட்டி, ரத்த பலி கொடுத்த கொடூரனின் செயல், அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.