மேலும், “இந்திய சந்தையை எலான் மஸ்க் மாற்றி அமைக்க முடியுமா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கண்டிப்பாக அவரால் இங்கே வெற்றி பெற முடியாது. அவர் அமெரிக்காவில் இருக்கிறார், நாம் இந்தியர்களாக இந்தியாவில் இருக்கிறோம். மகேந்திரா மற்றும் டாடா செய்யும் விஷயங்களை அவர் கண்டிப்பாக செய்ய முடியாது. அது அவரால் முடியாத விஷயம். அமெரிக்காவில் அவர் டிரம்ப் ஆதரவை பெற்றதால் அங்கு சாதித்திருக்கலாம்.
ஆனால், அதே நேரத்தில் எலான் புத்திசாலி என்பதில் சந்தேகமே இல்லை. கார் உற்பத்தி, விண்கலம் மற்றும் பல்வேறு துறைகளில் அவர் திறமைசாலி. அவர் மிகச் சிறப்பாக செயல்படுகிறார், அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால், இந்தியாவில் வெற்றி பெறுவது அவருக்கு எளிதான காரியம் அல்ல,” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் ஏற்கனவே மகேந்திரா, டாடா உள்ளிட்ட பல நிறுவனங்கள் மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றுள்ள நிலையில், டெஸ்லா நிறுவனம் திடீரென அந்த மார்க்கெட்டை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்