கடந்த சில ஆண்டுகளாக IT துறையில் பணிபுரிந்தால் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கலாம் என்றும், சில வருடங்களில் பணக்காரராகிவிடலாம் என்றும் இளைஞர்களின் கனவாக இருந்தது. எனவே தான் IT துறையில் பணியில் சேர வேண்டும் என்பதற்காக, அதற்கு தொடர்பான படிப்புகளில் ஏராளமான இளைஞர்கள் சேர்ந்து படித்து வந்தனர்.
இந்த நிலையில், IT துறையை விட தற்போது E-Commerce துறை அதிக சம்பளத்தை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. IT துறை வெளிநாட்டை நம்பி இருக்கும் வே;அஒ என்பதால், வெளிநாட்டு வேலைகள் குறைந்துவிட்டால், அந்தத் துறையில் பின்னடைவு ஏற்படும். ஆனால், E-Commerce துறை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது எனக் கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் தற்போது ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கும் நடைமுறை அதிகரித்து வருவதால், E-Commerce நிறுவனங்கள் மிக அதிக லாபம் ஈட்டிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இந்தத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திறமையான ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், அவர்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், பணியாளர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றுக்கும் E-Commerce நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. ஊழியர்களுக்கு சவால்கள் அதிகமாக இருந்தாலும், திறமையானோர் நல்ல சம்பளத்தையும் வளர்ச்சியையும் பெற்று வருகின்றனர். மேலும், IT துறையில் பணிபுரியும் ஊழியர்களை விட E-Commerce துறையில் பணிபுரிபவர்களுக்கு இரண்டு மடங்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் E-Commerce துறை ஒரு முக்கிய அங்கமாக உள்ள நிலையில், அந்தத் துறையில் பணிபுரியும் ஊழியர்களும் தனிப்பட்ட முறையில் அதிக வருமானம் பெற்று வருகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.