டாக்டர் கனவு.. பணம் இல்லாததால் ஆர்ட்ஸ் குரூப்பில் சேர்ந்த மாணவி.. தர்மேந்திர பிரதானிடம் இருந்து வந்த போன் கால்..!

  டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்ட ஒரு மாணவி, பிளஸ் ஒன் வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுக்க விரும்பினார். ஆனால், அவரது பெற்றோர் பணநிலை குறைவாக இருப்பதால், “ஆர்ட்ஸ் குரூப் எடுத்துப் படி” என்று கூறினர்.…

student

 

டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்ட ஒரு மாணவி, பிளஸ் ஒன் வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுக்க விரும்பினார். ஆனால், அவரது பெற்றோர் பணநிலை குறைவாக இருப்பதால், “ஆர்ட்ஸ் குரூப் எடுத்துப் படி” என்று கூறினர். அதனால், வேறு வழியின்றி, ஆர்ட்ஸ் குரூப்பை தேர்ந்தெடுத்து படிக்க முடிவு செய்தார்.

இந்த மாணவியின் காணொளி இணையத்தில் வைரலானது. அதன் பின்னர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அந்த மாணவிக்கு உதவி செய்தார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஷ்பு குமாரி என்ற மாணவி, டாக்டராக வேண்டும் என்ற கனவுடன், பிளஸ் ஒன் வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்வு செய்ய முடிவு செய்தார். “400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் அறிவியல் பிரிவில் படிக்க பணம் தருகிறேன்” என்று அவரது அம்மா கூறியிருந்தார். ஆனால், அவர் 399 மதிப்பெண்கள் பெற்றதால், அவரது அம்மா “ஆர்ட்ஸ் குரூப் படி” என்று கூறினார்.

அவரது தந்தையோ, நிதி பற்றாக்குறை காரணமாக, “நான் அறிவியல் பிரிவில் படிக்க வைக்க முடியவில்லை” என்று கூறினார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது.

இந்தக் காணொளியை பார்த்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உடனடியாக அவருக்கு தொடர்புகொண்டு, “நீ அறிவியல் பிரிவில் படிக்க அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன். பிரதமர் மோடி மற்றும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உனக்கு உதவி செய்வார்கள்” என்று உறுதி அளித்தார்.

இதன் மூலம், தற்போது அந்த மாணவிக்கு அறிவியல் பிரிவில் இடம் கிடைத்துள்ளது. இதனால், மாணவி மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.