செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க காரணமான 2 விஷயம்.. நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?

டெல்லி:சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த வழக்கில் இரண்டுகாரணங்களுக்காகத்தான் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்க உச்ச…

Do you know what are the 2 things and conditions that led to Senthil Balaji getting bail?

டெல்லி:சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது. இந்த வழக்கில் இரண்டுகாரணங்களுக்காகத்தான் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் கூறிய காரணம் மற்றும் அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பார்ப்போம்.

செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெஜ்ரிவாலுக்கும், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வெவ்வேறானவை ஆகும்.

ஜாமீன் பெற்றுள்ள செந்தில் பாலாஜி சட்டபூர்வமாக அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை. இந்த வழக்கை விசாரித்து முடிப்பதற்கு ஏற்படும் காலதாமதம், நீண்ட நாட்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருவது, இந்த இரண்டு காரணங்களையும் அடிப்படையாக கொண்டுதான், உச்ச நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கி உள்ளது என்றார்.

செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன? ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும், கட்டுப்பாடும் கிடையாது. அதேநேரம் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கவோ, அவர்களை சந்தித்துப் பேசவோ எவ்வித முயற்சியும் செந்தில் பாலாஜி மேற்கொள்ளக்கூடாது.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் செந்தில் பாலாஜி விசாரணை கைதியாகவே இருப்பதால், அவருடைய அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி இந்த ஜாமீனை பெறுவதற்கு ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும். விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது

இதையடுத்து செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. வழக்கின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் உடனடியாக பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது. செந்தில் பாலாஜி இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.