டிஜிட்டல் அரெஸ்ட்டில் சிக்கும் படித்த அறிவாளிகள்.. மிக எளிதாக தப்பிக்கும் படிக்காதவர்கள்..!

  கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மோசடியாளர்கள் “டிஜிட்டல் அரெஸ்ட்” என்ற ஒரு புதிய தந்திரத்தை பயன்படுத்தி பலரை சிக்க வைத்து, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பண மோசடி செய்து வருகின்றனர். இது குறித்து காவல்துறை…

arrest

 

கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மோசடியாளர்கள் “டிஜிட்டல் அரெஸ்ட்” என்ற ஒரு புதிய தந்திரத்தை பயன்படுத்தி பலரை சிக்க வைத்து, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பண மோசடி செய்து வருகின்றனர். இது குறித்து காவல்துறை பலமுறை விழிப்புணர்வு செய்தி வெளியிட்டிருந்தாலும், படித்த அறிவாளிகளே இதில் பெரும்பாலும் சிக்கி, பணத்தை இழந்து வருகின்றனர்.

சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண், “டிஜிட்டல் அரெஸ்ட்” மோசடியில் சிக்கி 33 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். அவரது ஆதார் கார்டு சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டது என்று கூறி, மோசடிக்காரர்கள் அவரை மிரட்டி, தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை பாதுகாப்பு கணக்கிற்காக மாற்றுமாறு கேட்டு ஏமாற்றினர். இதனால் அவர், தன்னுடைய மொத்த பணத்தையும் இழந்துவிட்டார்.

பெரும்பாலும் இந்த மோசடியில் படித்தவர்களே சிக்குகின்றனர். ஏனெனில், அவர்களுக்கு தங்கள் ஆதார் கணக்கு அல்லது பாஸ்போர்ட் தவறாக பயன்படுத்தப்பட்டது என்று கூறினால், அவர்கள் பதட்டமடைந்து மோசடிக்காரர்களின் வார்த்தைகளை நம்பி பணம் இழக்கிறார்கள்.

ஆனால், படிக்காதவர்களுக்கு இதுபோன்ற அழைப்புகள் வந்தால், “எனக்கு ஆங்கிலம் தெரியாது, நீங்கள் என்ன பேசுகிறீர்கள்?” என்று கூறிவிட்டு, போனை துண்டிக்கின்றனர். இதனால் மோசடிக்காரர்கள் அவர்களை விட்டுவிட்டு, வேறொரு நபரை தேடி செல்கின்றனர். அதனால்தான் ஆங்கிலம் நன்றாக பேசத் தெரிந்த படித்தவர்கள் அதிகம் ஏமாறுகிறார்கள்.

கடந்த சில மாதங்களாக இது தொடர்பான செய்திகள் ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இருந்தாலும், மக்கள் இதுபோன்ற “டிஜிட்டல் அரெஸ்ட்” மோசடியில் சிக்காமல் இருக்கிறார்களா என்றால், அப்படியில்லை. தினந்தோறும் ஏமாறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

எனவே, இந்தியாவில் “டிஜிட்டல் அரெஸ்ட்” என்ற ஒன்று இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொண்டு, இனிமேல் யாரும் ஏமாறாமல் இருப்பது அவசியம்.