தற்போது அனைத்து வங்கிகளும் கிரெடிட் கார்டுகளை கூப்பிட்டு கொடுத்து வரும் நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிரெடிட் கார்டு கிடைக்குமா என்பதை பார்க்கலாம். வங்கி விதிகள் என்ன சொல்கின்றன என்பதை கவனிக்கலாம்.
பொதுவாக, 60 வயதை தாண்டினால் கிரெடிட் கார்டு வழங்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம், அவர்களுக்கு நிலையான வருமானம் இல்லாமை மற்றும் பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கு கிடைப்பது பென்ஷன் மட்டுமே என்பதுதான்.
ஆனால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாங்கள் எந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறார்களோ, அந்த வங்கியில் தங்களுடைய பண பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து காண்பித்தால், அவர்களுக்கு கிரெடிட் கார்டு கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக நல்ல பண பரிவர்த்தனை செய்திருந்தால், 60 வயதுக்கு மேல் இருந்தாலும் கிரெடிட் கார்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏதாவது ஒரு வங்கியில் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடு செய்திருந்தால், அதை பாதுகாப்பு அடிப்படையாக வைத்து கிரெடிட் கார்டு வழங்க வங்கி விதிகளில் இடம் உள்ளது. இது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வங்கி கணக்கு இல்லாதவர்கள், கணக்கு இருந்தும் பண பரிவர்த்தனை அதிகம் இல்லாதவர்கள், பிக்சட் டெபாசிட் எதுவும் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கிரெடிட் கார்டு கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான்.