இந்த வயசுலயே அம்மாவுக்கு உதவியா.. அதுவும் சிரிச்ச முகத்தோட சிறுவன் செஞ்ச விஷயம்.. மனசை தொட்ட வீடியோ..

By Ajith V

Published:

நம் வாழ்க்கையில் நமக்கு சொந்தமாக இருக்கும் பல விஷயங்களைத் தாண்டி நாம் இன்னும் நிறைய எட்ட வேண்டும் என விருப்பத்துடன் இருப்போம். ஆனால் நம்மிடம் இருக்கும் பொருட்களையே அடைய முடியாமல் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு அது போகும் போக்கில் இங்கே நகர்ந்து கொள்பவர்களும் ஏராளமாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட வாழ்வில் இருந்து கொண்டும் எப்போதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் கொஞ்சம் இயலாத விஷயம் தான்.

ஆனால் அப்படிப்பட்ட தடைகளை எல்லாம் தாண்டி வெள்ளந்தியாக சிரித்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் தொடர்பான செய்தி ஒன்றுதான் தற்போது பலரையும் மனம் கரைய வைத்துள்ளது. பெற்றோர்களின் குடும்பசூழல் காரணமாக அவர்களின் பிள்ளைகளும் கூட ஏதாவது ஒரு காரணத்தில் வறுமையின் பிடியில் சிக்கி தவிப்பதும் வழக்கம் தான். என்றாவது தான் பெரிய ஆளாகி தாய், தந்தையர்களை நல்லபடியாக பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கம் அவர்கள் மனதில் இருக்கும்.

சிறுவனின் வெள்ளந்தி சிரிப்பு

அதே வேளையில் தங்களால் முடிந்த உதவிகளையும் அவர்களுக்கு செய்ய வேண்டும் என்றும் நினைப்பார்கள். அப்படி இரண்டு சிறுவர்கள் முகத்தில் இருந்த சிரிப்பு தொடர்பான வீடியோ ஒன்று பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். சண்டிகர் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் அங்கே சாலையோரம் பெண் ஒருவர் சோளத்தை விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.

அப்போது அந்தப் பெண்ணின் மகன்கள் இரண்டு பேர். தாய் தயார் செய்யும் சோளத்தை அங்கே சாலையின் ஓரம் நிற்கும் காரை நிறுத்திக் கொண்டு நிற்பவர்களிடமும், அந்த வழியாக செல்பவர்களிடமும் விற்பனை செய்தும் கொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு வறுமையின் அடையாளம் இல்லாமல் சிரித்த முகத்துடன் கொஞ்சமும் சோர்வாகமல் ஓடி ஓடி அனைத்து வாடிக்கையாளர்களிடமும் சோளத்தை விற்பனை செய்து வருகின்றனர்.

இதயத்தை தொட்ட வீடியோ..

அப்போது அங்கே நிற்கும் கார் ஒன்றின் அருகே அதே சிரித்த முகத்துடன் செல்லும் சிறுவர்கள் சோளம் வேண்டுமா என கேட்க, அவரும் வேண்டும் என கூறுகிறார். தொடர்ந்து சிறுவனும் சோளத்தைக் கொண்டு வந்து கையில் கொடுக்க, அவரோ சிரித்து விட்டு அதிகமான பணத்தை கொடுக்கிறார். சேன்ஜ் எப்போது வாங்கிவிட்டு வருவாய் என அவரும் செல்லமாக கேட்க அந்த சிறுவன் ஓடோடி சென்றதும் மீதி பணம் வேண்டாம் எனக் கூறிக்கொண்டு அந்த காரும் அங்கிருந்து கிளம்புகிறது.

இந்த வீடியோ முழுக்க வறுமை தெரியாமல் சிரித்துக் கொண்டே நிற்கும் அந்த சிறுவனின் முகம் தான் பார்ப்பவர்கள் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் அந்த காரில் வந்த நபரின் செயலும் தற்போது பலரையும் மனம் உருக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோவை அவரே எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட வைரலாகியும் வருகிறது.