அறிமுகப்படுத்தப்பட்ட பிஎஸ்என்எல் புதிய லோகோ.. இதெல்லாம் கவனிச்சீங்களா?

By John A

Published:

மத்திய அரசின் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஏர்டெல்,ஜியோ, வோடபோன் போன்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களைப் போலவே அடுத்தடுத்து 4ஜி, அதிகவே இண்டர்நெட் இணைப்பு, சாட்டிலைட் மூலம் தொலைத் தொடர்பு என அடுத்தடுத்து அப்டேட்களைக் கொடுத்து அசத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது பிளான்களின் கட்டண விகிதத்தை மாற்றியமைத்த சூழலில் பலரும் இதர நெட்வொர்க்குகளிலிருந்து விலகி பிஎஸ்என்எல்-ல் இணைந்தனர்.

மேலும் தொலைத் தொடர்பு வசதி கிடைக்காத கிராமங்களிலும், மலைப் பகுதிகளிலும் பிஎஸ்என்எல் தனது சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக இதர நெட்வொர்க்குகளைக் காட்டிலும் குறைவான கட்டணத்தில் பல பிளான்கள் இருப்பதால் பலரும் ஆர்வமுடன் பிஎஸ்என்எல்-க்கு மாறி வருகின்றனர். இதுமட்டுமன்றி இணைய இணைப்பினைப் பொறுத்தவரை இன்று வரை பிஎஸ்என்எல் தான் முன்னணியில் உள்ளது.

எம்.ஆர்.ராதா அப்படிப்பட்டவரா? ராதாரவி சொல்றது எல்லாமே புதுசா இருக்கே…!

இந்நிலையில் பிஎஸ்என்எல் தனது லேகோவை மாற்றியமைத்துள்ளது. முழுவதும் காவி வர்ணத்தில் இரண்டு அம்புக்குறிகளும் தேசியக் கொடி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவி வட்டத்தின் நடுவே இந்திய வரைபடமும் அதில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் பழைய லோகோவில் Connecting India என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். தற்போது அது மாற்றப்பட்டு Connecting Bharat என்று மாற்றப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.BSNL-ன் புதிய லோகோவை அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே காவி வர்ணம் பா.ஜ.கவின் அடையாளத்தினைக் குறிக்கும் என்பதால் பிஎஸ்என்எல் லோகோவிலும் காவி வர்ணம் இடம்பெற்றிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.