நாராயணமூர்த்தியின் மருமகனும், ரோஹன் மூர்த்தி மற்றும் அபர்ணா கிருஷ்ணனின் மகனுமான 17 மாத குழந்தை எகாக்ரா ரோஹன் மூர்த்தி, ரூ.3.3 கோடி வருமானம் ஈட்டுகிறார் என்றால் நம்ப முடிகிறதா?
17 மாத குழந்தை எகாக்ரா ரோஹன் மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 15,00,000 பங்குகளை (0.04% வைத்துள்ளார். எனவே அந்த குழந்தக்கு டிவிடெண்ட் மூலமே ரூ.3.3 கோடி வருமானம் கிடைக்க போவதாக கூறப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் ஏப்ரல் 11 ஆம் தேதி 2024-25 நிதியாண்டுக்கான இறுதி லாபப் பகிர்வாக ஒவ்வொரு பங்கிற்கும் ரூ.22 வழங்கப்படும் என அறிவித்தது. இதற்கான பதிவு தேதி மற்றும் வருடாந்த பொதுக்கூட்டம் மே 30 அன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், நாராயணமூர்த்தியின் மகளும், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அவர்களின் மனைவியுமான அக்ஷதா மூர்த்திக்கு ரூ.85.71 கோடி லாபம் கிடைக்கவுள்ளது. அவர் 3.89 லட்சம் இன்ஃபோசிஸ் பங்குகளை வைத்துள்ளார். இது 2024 டிசம்பர் காலாண்டு அறிக்கையில் பதிவாகியுள்ளது.
நாராயணமூர்த்தி அவர்களுக்கே ரூ.33.3 கோடி வருமானம் கிடைக்கும். அவரது மனைவியுமான சுதா மூர்த்தி அவர்களுக்கு ரூ.76 கோடி லாபமாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Born with silver Spoon என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் உண்மையாகவே இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் பேரன் தான் இந்த பழமொழிக்கு தகுதியானவர்.