BMW காரில் வந்து சாலையோரம் சிறுநீர் கழித்த வாலிபர்.. வீடியோ வைரலானதால் கைது..!

  BMW காரில் வந்த ஒரு இளைஞர் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு, சாலையோரம் சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் காரில் வந்த அவருடைய…

bmw car

 

BMW காரில் வந்த ஒரு இளைஞர் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு, சாலையோரம் சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் காரில் வந்த அவருடைய நண்பரும் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

புனேவில் உள்ள வாகன நெரிசல் மிகுந்த ஒரு சாலையில், BMW கார் திடீரென சாலையின் நடுவில் நின்றது. அதிலிருந்து இறங்கிய வாலிபர் ஒருவர், சாலை ஓரம் சிறுநீர் கழித்தார். அப்போது, ஒருவர் அவரை வீடியோ எடுத்தார். அவசர அவசரமாக சிறுநீர் கழித்து முடித்துவிட்டு, அந்த வாலிபர் உடனடியாக காரில் ஏறி வேகமாக சென்றுவிட்டார். மேலும் வீடியோ எடுத்தவரை நோக்கி, அவர் ஆபாசமான முறையில் கையால் சைகை காட்டிவிட்டு சென்றார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுநீர் கழித்த நபரையும், அவருடைய நண்பரையும் தேடினர். இந்த நிலையில், சிறுநீர் கழித்த வாலிபர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டார். மேலும், “தன்னை கைது செய்ய வேண்டாம், நானே சரண்டர் ஆகிவிடுகிறேன்” என்று கூறியிருந்தார்.

இருப்பினும், இரவோடு இரவாக அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் மீதும்கூட வழக்கு பதிவு செய்யப்பட்டு, பொது இடத்தில் தொந்தரவு செய்தல், பேருந்து மற்றும் வாகனங்களுக்கு அபாயம் விளைவித்தல், மோசமான முறையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://x.com/peepoye_/status/1898318085603676227