பாம்பு கடிச்சா ஹாஸ்பிடல் போகமாட்டோம்.. இந்த கோவில் போனா சரி ஆயிடுமாம்.. ஊரே மலை போல நம்பும் தெய்வம்..

By Ajith V

Published:

பொதுவாக நமக்கு பாம்பு கடித்தால் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று உயிரை காப்பாற்றிக் கொள்ளத்தான் நினைப்போம். அதிக விஷத்தன்மை உள்ள பாம்பு நம்மை கடித்தால் ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரத்தில் கூட மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதனால் முடிந்தளவுக்கு பாம்பு கடித்த நபர் பயப்படாமல் மிக அமைதியாக இருந்து மருத்துவமனைக்கு சென்று சேர்த்தாலே சிகிச்சை பெற்று உயிர் தப்பிக்க முடியும். ஆனால் ஒரு கிராமத்தில் பாம்பு கடித்தால் அங்குள்ள மக்கள் ஒரு கோவிலுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்வார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. நிஜத்தில் அப்படி ஒரு சம்பவம் தொடர்பான தகவல் தான் தற்போது பலரையும் ஒரு நிமிடம் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் சத்திரப்பூர் மாவட்டத்தில் மகாராஜ்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கே ஒரு நபரை பாம்பு கடித்தால் அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் நிச்சயமாக உயிர் பிழைத்து விடுவார் என்று நம்பிக்கை இருந்து வருகிறது. இதற்கு காரணம் இங்கே ஒருவரை பாம்பு கடித்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லாமல் அங்கே இருக்கும் Bidehi Baba (பிதேஹி பாபா) என்ற கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

இது தொடர்பாக இங்கே பூசாரியாக இருக்கும் ராஜ்குமார் திவாரி தெரிவிக்கும் தகவலின் படி பிதேஹி பாபாவின் மகிமையால் தான் இங்கே பாம்பு கடியால் வருபவர்கள் உயிர் பிழைப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கோவிலில் நாகப்பாம்பு ஒன்று இருப்பதாகவும் அதனை அங்குள்ள பூசாரி பராமரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இந்த கோவில் உள்ள வரலாற்று கதைப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசர் ஒருவர் தனிமையில் இருப்பதற்காக இந்த காட்டுப் பகுதிக்கு வந்ததாகவும் பின்னர் அங்கே சமாதி அடைந்ததாகவும் அதற்கு மேல் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெண் ஒருவர் தனது மகனுக்கு பாம்பு கடித்ததாக இந்த கோவிலில் வந்த பிறகு தான் இந்த அற்புதம் தொடங்கியுள்ளதாக கருதப்படுகிறது. பாம்புக்கடி ஏற்பட்டு வந்த வாலிபர் குணமடைந்து பின்னர் வீடு திரும்பியதால் அந்த ஊரில் யாரை பாம்பு கடித்தாலும் இங்கே வந்து அவர்கள் குணமடைந்து செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பாம்பு மட்டுமில்லாமல் விஷ பூச்சிகள் ஏதேனும் கடித்தால் கூட இந்த கோயிலுக்கு வந்தால் குணமடைந்து விடுவதாக நம்பப்படுகிறது.

பாபாவின் பெயரை கூறிக்கொண்டு தலையில் ஒரு கயிறை கட்டினால் பாம்பு கடி ஏற்பட்டவர்கள் குணமடைந்து விடுவார்கள் என்றும் அவர்களுக்கு நெய்யும், கருப்பு மிளகாயும் கொடுத்து குணமடைய செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு சில நாட்களில் எல்லாம் 20 முதல் 25 பேர் பாம்புக்கடி ஏற்பட்டு வந்ததுடன் அனைவருமே குணமடைந்து சென்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

அந்த பகுதியில் இருப்பவர்கள் இதை பெரிதாக நம்பினாலும் இணையத்தில் இதை படிக்கும் பலரும் இதில் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம் என்றும் முழுமையாக இதனை நம்ப முடியாது என்றும் கருத்தை குறிப்பிட்டு வருகின்றனர்.