ஒரு காலத்துல எப்படி இருந்தவரு தெரியுமா.. பெங்களூரு தெருவில் அலைந்து திரியும் நபரின் திகைக்க வைத்த பின்னணி..

என்ன தான் வாழ்க்கையில் நாம் நினைத்ததை செய்து அதிக பணம் சம்பாதித்து நல்ல வாழ்க்கையை வாழ்ந்தாலும் உளவியல் ரீதியாகவும், மனரீதியாகவும் நமக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறது என்றால் உடனடியாக அதை சரி செய்வதற்கான வழிகளை…

Former engineer in bengaluru streets

என்ன தான் வாழ்க்கையில் நாம் நினைத்ததை செய்து அதிக பணம் சம்பாதித்து நல்ல வாழ்க்கையை வாழ்ந்தாலும் உளவியல் ரீதியாகவும், மனரீதியாகவும் நமக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறது என்றால் உடனடியாக அதை சரி செய்வதற்கான வழிகளை தான் மேற்கொள்ள வேண்டும். மனதில் உள்ள வேதனையை சரியான நேரத்தில் நாம் பகிர்ந்து அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை மேற்கொள்ளவில்லை என்றால் நிச்சயம் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளை சந்திக்க கூடும்.

இப்படி மேற்கூறிய பிரச்சனைகள் பெரிதானதன் காரணமாக ஒருவரது வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறியது என்றும், ஐடி ஊழியராக இருந்த ஒருவர் எப்படி பிச்சைக்காரராக தெருவில் சுற்றி வருகிறார் என்பது பற்றியும் தற்போது பார்க்கலாம். சமீபத்தில் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த சரத் யுவராஜா என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோக்களை பகிர்ந்திருந்தார். அதில் டி-ஷர்ட் அணிந்து நன்றாக ஆங்கிலம் பேசும் ஒருவர் பெங்களூரில் ஜெயா நகர் என்னும் பகுதியில் பிச்சைக்காரரைப் போல் சுற்றி திரிந்தது தெரிய வந்துள்ளது.

தலைகீழான வாழ்க்கை..

இதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் விசாரித்த சமயத்தில் அவர் கூறிய பல தகவல்கள் சரத் யுவராஜா என்ற இளைஞரை அதிகம் திகைப்படைய வைத்துள்ளது. பார்ப்பதற்கு நன்கு படித்தவர் போல் தெரிந்த அவர், அங்கே பசியை போக்குவதற்காக பிச்சை எடுத்து திரிந்து வருவதை சரத் யுவராஜா கவனித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்பது பற்றிய காரணத்தை கேட்டபோது அவரோ சில ஆண்டுகளுக்கு முன்பாக ஐடி ஊழியராக இருந்ததாகவும் தாய், தந்தையின் மறைவிற்கு பின்னரும், காதலியின் பிரிவுக்கும் பின்னரும் வெற்றிடமாக வாழ்க்கை மாறிப் போனதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர் வேலை பணம் அனைத்தையும் இழந்து பித்து பிடித்து போனது போல அலைந்துள்ளார். இதனால் வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போனதுடன் மனதளவிலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெர்மனியிலும் இவர் சில காலங்கள் பணிபுரிந்ததாக தகவல்கள் கூறும் நிலையில் தாய் தந்தையரின் இழப்பிற்கு பின்னர் இப்படி ஆகிவிட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

மனநலமும் ரொம்ப முக்கியம்

மேலும் ஐன்ஸ்டீன் தியரி தொடங்கி பல தத்துவங்கள் பற்றியும் நிறைய கருத்துக்களை அந்த நபர் வீடியோவில் பேசுகிறார். அப்படிப்பட்ட ஒரு மனிதராக இருந்த போதிலும் சில தவறான பழக்கங்களுக்கு அடிமையானதால் மனதளவிலும் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்த வாலிபர் தொடர்பான வீடியோ தற்போது பலர் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது.

என்னதான் பணம் சம்பாதித்தாலும் தவறான பாதைக்கு செல்லும்போது வாழ்க்கை இப்படி மாறி அவரை மொத்தமாக மாற்றி விடும் என்பது பலரை எச்சரிக்கும் பொருட்டாக உள்ளது என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.