83 வயதில்.. சாலையில் இறங்கி சுத்தம் செய்த முதியவர்.. அவரே சொன்ன பரபர காரணம்.. வீடியோ

தற்போது எல்லாம் ஒருவருக்கு 30 முதல் 35 வயது ஆகிவிட்டாலே அவரது உடல்நிலை சோர்வடைவதுடன் மட்டுமில்லாமல் பல இடங்களில் வேதனை அடைய தொடங்குவதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர். இதன் காரணமாக முடிந்த அளவுக்கு வேகமாக பணம்…

83 year old man clean streets

தற்போது எல்லாம் ஒருவருக்கு 30 முதல் 35 வயது ஆகிவிட்டாலே அவரது உடல்நிலை சோர்வடைவதுடன் மட்டுமில்லாமல் பல இடங்களில் வேதனை அடைய தொடங்குவதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர். இதன் காரணமாக முடிந்த அளவுக்கு வேகமாக பணம் சம்பாதித்து விட்டு 60 வயதில் ஓய்வெடுத்து பேரக் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்றும் அல்லது எந்த வேலையும் செய்யாமல் தங்களது உடல்நலத்தை பேணி கொஞ்ச நாளாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என இளம் வயதில் பலரும் கூறுகின்றனர்.

இங்கே பல விதமான வேலைகளுக்கு செல்வதற்கு மத்தியில் மன உளைச்சலும் அதிகமாக இருப்பதால் அது உடல் நலத்திற்கு இன்னும் தீங்காக தான் உள்ளது. இதனால் முந்தைய காலத்தில் இருப்பவர்களைப் போல இல்லாமல் தற்போது இளம் வயதிலேயே பலரும் சோர்ந்து போய் காணப்படும் நிலையில் பெங்களூரை சேர்ந்த 83 வயது முதியவர் ஒருவர் சமீபத்தில் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ அனைவரையும் உத்வேகப்படுத்தும் அளவிற்கு இன்ஸ்பயரிங்காக இருந்து வருகிறது.

83 வயசுயும் மாஸ் பண்ணிட்டாரு..

பெங்களூருவில் அமைந்துள்ளது HSR Layout என்னும் பகுதி. இங்கே தான் சுமார் 83 வயதான சூர்ய நாராயணன் தனது மனைவியுடனும் வசித்து வருகிறார். மேலும் இவர் சரியான நேரத்தில் வரி உள்ளிட்டவற்றை செலுத்தி வந்த போதிலும் அவர் இருக்கும் பகுதி எப்போதுமே நிர்வாகத்தினரால் சுத்தம் செய்யப்படாமல் மிக மோசமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி உயர் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சாலைகள் எங்கும் குப்பையாக இருக்க மழை பெய்து விட்டால் நீர் தேங்கி நின்று அதுவும் சுகாதார ரீதியில் பல பிரச்சனைகளை கொண்டு வருவதையும் சூரிய நாராயணன் கவனித்துள்ளார்.

சபாஷ் போட வைத்த முதியவர்

83 என்ற வயதை ஒரு பொருட்டாகவே பார்க்காத சூர்ய நாராயணன் தற்போது நாள்தோறும் சுற்றியுள்ள பகுதிகளில் சாலை மற்றும் நீர் தேங்கும் இடங்களில் சரி செய்து சுத்தப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இங்கிருக்கும் குப்பைகள் அனைத்தையும் பெருக்கி அந்த இடத்தை சுத்தமாகவும் அவர் வைத்திருந்து வருகிறார். Hsr லே அவுட் பகுதியில் இருக்கும் ஒரு நபர், சூர்ய நாராயணன் அந்த இடங்களை சுத்தம் செய்வது தொடர்பாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

சரியாக வரி செலுத்துபவர் இருக்கும் இடத்தை கூட இப்படித்தான் கழிவு பொருட்களை சுத்தம் செய்யாமல் வைத்திருப்பீர்களா என்றும் அப்பகுதி நிர்வாகத்தினரை பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த பகுதி அரசு அதிகாரிகள் கவனம் எடுத்து அப்பகுதியை சுத்தப்படுத்தாமல் இருப்பது ஒரு பக்கம் இருக்க, இந்த வயதிலும் முன்னால் வந்து ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த சூர்ய நாராயணன் என்ற முதியவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.