பெங்களூரில், ஒரு இளம் பெண் தனது காதலரின் பைக்கில் பெட்ரோல் டேங்கின் மீது உட்கார்ந்து, காதலரை கட்டிப்பிடித்தபடி பயணம் செய்தார். சில நிமிடங்களில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் நடவடிக்கை எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் செல்லும் சாலையில் அபாயகரமாக பைக்கில் பயணம் செய்யக்கூடாது என்று ஏற்கனவே காவல்துறை அறிவுறுத்திய நிலையில், பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் தனது காதலியை பெட்ரோல் டேங்கில் உட்கார வைத்துக் கொண்டு பயணம் செய்துள்ளார். இதற்கான வீடியோ இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பெங்களூரு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து பெங்களூர் எஸ்.பி. கூறியதாவது: “பைக்கில் ஆபத்தான ஸ்டண்ட் செய்வது காதலின் வெளிப்பாடு அல்ல. இது சட்டத்தை மீறுவதுடன், பொது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும். எனவே, காவல்துறையினர் இந்த அபாயகரமான பைக் பயணத்திற்கு காரணமான ஐடி ஊழியர் மற்றும் அவரது காதலி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது மிகவும் பொறுப்பற்ற செயல். இவ்வாறு செய்வது, உங்கள் உயிருக்கு மட்டுமின்றி, பிறரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”
பெங்களூர் போலீசாரின் துரிதமான இந்த நடவடிக்கைக்கு ஏராளமான மக்கள் நேர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், சிலர் இதே போல சாலைகளில் இருக்கும் குழிகள் சரி செய்யவும், குப்பைகளால் மூடிய சாலைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://x.com/bngdistpol/status/1895352385071108396