ஆட்டோவை ஓட்டி கொண்டே நடிகை ஸ்ரீலீலா இன்ஸ்டாகிராம் பார்த்த ஆட்டோ ஓட்டுனர்.. அறிவுரை சொல்வாரா ஸ்ரீலீலா?

பெங்களூருவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவை ஓட்டிக்கொண்டே இன்ஸ்டாகிராமில் நடிகை ஸ்ரீலீலாவின் புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்த சம்பவம், அந்த ஆட்டோவில் பயணித்த ஒருவருக்கு கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சமூக வலைதள…

auto

பெங்களூருவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவை ஓட்டிக்கொண்டே இன்ஸ்டாகிராமில் நடிகை ஸ்ரீலீலாவின் புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்த சம்பவம், அந்த ஆட்டோவில் பயணித்த ஒருவருக்கு கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சமூக வலைதள பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆட்டோவில் பயணம் செய்த ஒரு பயணி தனது அனுபவத்தை ரெடிட் சமூக வலைதளத்தில் பதிவிட, அது வைரலாக பரவி, பலரும் இதேபோன்று தங்களுக்கும் அனுபவம் நேர்ந்துள்ளது என்று பகிர்ந்து வருகின்றனர்.

பயணியின் பகீர் அனுபவம்:
அந்த பதிவில், பயணி ஒரு முக்கியமான பணிக்காக அவசரமாக ஆட்டோவில் பயணம் செய்ததாகவும், தான் செல்லும் காரியம் வெற்றி அடையுமா என்ற பதட்டத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் திடீரென ஆட்டோவின் வேகத்தை குறைத்து, தனது மொபைலில் இன்ஸ்டாகிராமை திறந்து, ஒரு கையால் ஆட்டோ ஓட்டிக்கொண்டு, இன்னொரு கையால் இன்ஸ்டாகிராமில் ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

அவர் நடிகை ஸ்ரீலீலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதை அறிந்ததும், பயணி கோபத்துடன் கூடிய அச்சம் அடைந்ததாகவும், இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் எந்த விதமான பதிலையும் சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், “ஸ்ரீலீலாவின் ப்ரோஃபைலை ஓபன் செய்து, அவரது பதிவுகளை வரிசையாக பார்த்து கொண்டே தொடர்ந்து ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தார். நான் உண்மையில் கோபம் அடைந்தேன். அதுமட்டுமின்றி, ஆட்டோ ஏதாவது ஆகிவிடுமா என்ற அச்சமும் இருந்தது. அதே நேரத்தில் இந்த பயணத்தைக் கைவிட முடியாது என்பதால், என்னால் அதற்கு மேல் எதுவும் கூறவில்லை. நல்ல வேலையாக விபரீதமாக எதுவும் நடைபெறவில்லை. ஆனால், இது ஆட்டோ ஓட்டுநரின் பொறுப்பற்ற செயல், இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

சமூக வலைதளப் பரவலான கண்டனம்:
இந்த இடுகைக்கு ஏராளமானோர் கருத்து பிரிவில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களையும் தெரிவித்துள்ளனர். “நான் ஒருமுறை ஆட்டோவில் செல்லும்போது திடீரென ஆட்டோவை ஓரமாக நிறுத்திய டிரைவர் வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டிருந்தார்” என்றும், “ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் இது சர்வ சாதாரணமாகிவிட்டது” என்றும் பலர் தெரிவித்தனர்.

“நமது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணியின் பாதுகாப்பு முக்கியம் என்பதை ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டுகொள்வதே இல்லை” என்றும், “இன்ஸ்டாகிராம் பார்க்க வேண்டும் என்றால் எதற்காக நீங்கள் ஆட்டோ ஓட்டுகிறீர்கள்? வீட்டில் இருந்துகொண்டே இன்ஸ்டாகிராம் பார்க்க வேண்டியதுதானே?” என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பயணம் செய்யும்போது மொபைலில் போன் பேசுவதே சட்டப்படி குற்றம் என்று கூறப்படும் நிலையில், மொபைலில் இன்ஸ்டாகிராம் பார்ப்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பது போன்ற கண்டனக் கருத்துகளும் பதிவாகி வருகின்றன.