வங்கிகள் இந்த உயர்வை வாடிக்கையாளர்களிடம் மாற்றுவார்களா என்பதை இதுவரை முடிவு செய்யவில்லை. எனினும், முந்தைய அனுபவங்களின் அடிப்படையில், இறுதியில் வாடிக்கையாளர்களே இதற்கான பாரத்தை ஏற்க வேண்டி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் ATM பரிமாற்றக் கட்டணங்கள் மாற்றப்பட்ட போதெல்லாம் வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் வங்கிகள் கூடுதலாக பெற்றது. இந்த முறை கூட அதில் மாற்றம் இருக்காது” என்று ஒரு மூத்த வங்கி அதிகாரி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ATM பரிமாற்றக் கட்டணம் என்பது ஒரு வங்கி, மற்றொரு வங்கியின் ATM சேவைகளை பயன்படுத்தியதற்காக செலுத்தும் கட்டணமாகும். இது பொதுவாக வாடிக்கையாளர்களின் மொத்த செலவில் சேர்க்கப்படும். பணத்தை எடுப்பது போன்ற நிதியியல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ₹17-இல் இருந்து ₹19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பேலன்ஸ் சரிபார்த்தல் போன்ற நிதியியல் அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ₹6-இல் இருந்து ₹7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ATM பயன்பாட்டை பொருத்தவரை வங்கி வாடிக்கையாளர்களுக்கு உள்ள இலவச பரிவர்த்தனை வரம்பு மெட்ரோ நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். மெட்ரோ அல்லாத பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம்.
ATM பரிமாற்றக் கட்டண உயர்வு சிறிய வங்கிகளுக்கு பெரும் சவாலாக அமையும். ஏனெனில் சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் அதிகமாக இருக்கும். இந்த செலவினை வாடிக்கையாளர்களுக்கு மாற்றினால் அவர்கள் அதில் பாதிக்கப்படுவார்கள்.
ATM பரிமாற்றக் கட்டணங்கள் கடைசியாக 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர்த்தப்பட்ட நிலையில் அதன்பின்னர் தற்போது தான் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ATM கட்டண உயர்வு குறித்து வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கூறியபோது, இனிமேல் ATM பக்கமே செல்ல முடியாது, அவசர தேவையென்றால் வங்கியில் சென்று தான் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
