திருவனந்தபுரம்: நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன், ஐஏஎஸ் தேர்வு எழுதுவோருக்கான யூடியூப் சேனல் தொடங்கினார். வெறும் 21 வயதில் இப்போது 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் வாங்கி உள்ளார்.இந்த வியப்பான செய்தியை பற்றி பார்ப்போம்.
கேரளாவின் கடைக்கோடு ஏரியான காசர்கோடு பகுதியில் உள்ள மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவர் சயோஜ். இவருக்கு வெறும் 21 வயதுதான் ஆகிறது. இவர் கேரளாவில் நன்கு அறியப்படும் ஒரு யூடியூபராக வெறும் சில வருடங்களிலேயே மாறி உள்ளார். இவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்து பிஎஸ்சி படித்து வருகிறார். இவ ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு யூடியூப் மூலம் பாடம் நடத்தி வருகிறார்.
இவர் வகுப்பு எடுக்கும் முறை மிகச் சிறப்பாக இருக்கும் என்பதால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இவரது வீடியோக்களை விரும்பி பார்க்கிறார்கள். இவர் சிவில் சர்வீஸ் தேர்வு மட்டுமின்றி, ஆப்டிட்யூட் தேர்வு (CSAT), வரலாறு, புவியியல் எனப் பல பாடங்களை நடத்தி வருகிறார்.
அந்த யூடியூப் முலம் வந்த வருமானத்தைக் கொண்டு 10 லட்ச ரூபாய்க்கு கார் ஒன்றை வாங்கி உள்ளார். இவர் காசர்சோட்டில் உள்ள செயின்ட் பயஸ் எக்ஸ் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். சயோஜ் படிக்கும் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக வேலை பார்த்து வரும் ஷினோஷ், சயோஜிடம் அழைத்து நுண்ணுயிரியல் பாடங்கள் தொடர்பாக எழுதிய புத்தகங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு இன்னும் ஒருநாள்தான் டைம்.. ஆகவே தவறவிட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு சயோஜ், தான் கார் வாங்கப் போவதால் குறிப்பிட்ட அன்று கல்லூரிக்கு வரமாட்டேன் என்று கூறி பேராசிரியருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதனியே சயோஜ் எப்படி இப்படி மாறினார் என்பது முக்கியம். சாயோஜ் கடந்த 2022 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்து முடிந்த பிறகு, மருத்துவராவதற்காக நீட் தேர்வை எழுதினார். ஆனால் தேர்வில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. தன் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 35 கிமீ தூரமுள்ள கல்லாறு பஞ்சாயத்தில் உள்ள ராஜபுரம் செயின்ட் பயஸ் எக்ஸ் கல்லூரியில் போய் படித்து வந்துள்ளார். அங்கு அவருக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவு உருவானது. அதற்காக 2 ஆங்கில பத்திரிகைகளை சந்தா கட்டி வாங்கி படிக்க ஆரம்பித்தார். நிறையக் குறிப்புகளை எடுக்கத் தொடங்கி இருக்கிறார்.
முதலில் ஆங்கில பத்திரிகையைப் படிக்கத் தொடங்கிய போது புதிய புதிய ஆங்கில வார்த்தைகளை படிக்க சயோஜ்க்கு கஷ்டமாக இருந்தது. அதன்பின்னர் ஆங்கிலம் கற்க வேண்டி நாவல்களைப் படிக்கத் தொடங்கி உள்ளார். நிறைய ஆங்கிலப் படங்களைப் பார்த்து அதில் வரும் உரையாடல்கள் மூலம் மொழியைக் கற்றுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சசி தரூர் பேச்சுகளை விரும்பி கேட்டஅவர், விடாமல் கேட்டுப் பழகி ஒரு வழியாக ஆங்கிலத்தை திறமையாக கற்றுள்ளார்.
சரோஜ் ஆங்கிலத்தில் தடுமாறிய காலத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராக சிரமப்பட்டார். தன்னை போல் யாரும் சிரமப்படக்கூடாது என்று நினைத்த அவர், ஐஏஎஸ் தேர்வுகளுக்கான பாடங்களை மிக எளிமையாக பிபிடி தயாரித்து அதனைக் கொண்டு விளக்கம் அளிக்கும் வீடியோக்களை பொழுதுபோக்காக தொடர்ச்சியாக யூடியூப்பில் வெளியிட்டு வந்துள்ளார் சயோஜ். அதை இஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக பக்கங்களில் விடாமல் பகிர்ந்து வந்துள்ளார். வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும் பகிர்ந்துள்ளார். அதன் மூலம் சானல் பிரபலமானது.
முதலில் தன் சானலுக்கு எஸ்சி ஐஏஎஸ் அகாதெமி எனப் பெயர் வைத்துள்ளார். பின்னர் ஐஏஎஸ் ஹப் மலையாளம் என்று மாற்றியுள்ளார். 2 மாதங்களில், 10,000 பேர் பின் தொடர தொடங்கியுள்ளனர். தற்போது பலருக்கு ஆன்லைன் மூலம் தனியாக வகுப்பும் எடுத்து வந்துள்ளார். இன்றைக்கு அந்த யூடியூப் கொடுத்த வருமானத்தைக் கொண்டு, 10 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கி கேரளாவையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.