ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் தனது தொழிலுக்கு அடித்தளம் பதித்துள்ளது. ஆனால், இதற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும், அரசு நிறுவனங்களுடன் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், மத்திய அமைச்சரே இதற்கான அரசின் அனுமதி எளிதாக கிடைக்கும் என்பதற்கான சைகையாக அந்த பதிவு இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனால், பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உருவாக, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது பதிவை நீக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவிற்கு வருவது பற்றி பிரதமர் மோடி உள்ளிட்ட பெரிய தலைவர்கள் இன்னும் எந்த வரவேற்பு பதிவு செய்யாத நிலையில், ரயில்வே துறை அமைச்சர் அந்த பதிவை போட்டிருப்பதே பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த சூழலில், இந்தியாவிற்கு வர உள்ள ஸ்டார்லிங்க் ஒப்பந்தங்கள் தொலைத்தொடர்பு துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்குதல் என்பது இந்தியாவில் இணைய சேவை மிக எளிதாக கிடைக்கும் வகையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் ஸ்டார்லிங்க் உபகரணங்களை ஜியோ தனது சில்லறை கடைகளில் நேரடியாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதால், மிகப்பெரிய அளவில் ஸ்டார்லிங்க் தயாரிப்புகள் இந்தியாவில் விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.