ஆப்பிள் ஷோரூம் பக்கத்திலேயே கடை விரிக்கும் எலான் மஸ்க்.. மும்பையில் பரபரப்பு..!

  மும்பையில் ஆப்பிள் ஷோரூம் இருக்கும் இடத்தின் பக்கத்திலேயே டெஸ்லா நிறுவனம் தனது ஷோரூமை அமைக்க இருப்பதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு, மும்பையில் ஆப்பிள் நிறுவனம் பாண்ட்ரா குர்லா…

apple vs tesla

 

மும்பையில் ஆப்பிள் ஷோரூம் இருக்கும் இடத்தின் பக்கத்திலேயே டெஸ்லா நிறுவனம் தனது ஷோரூமை அமைக்க இருப்பதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு, மும்பையில் ஆப்பிள் நிறுவனம் பாண்ட்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் (BKC) என்ற பகுதியில், ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் தனது முதல் சில்லறை ஷோரூமை திறந்தது. இந்த ஷோரூம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

ஆனால், இந்த கடையின் வாடகை ஒப்பந்தத்தில், மைக்ரோசாஃப்ட், அமேசான், கூகுள், பேஸ்புக், எல்ஜி, சோனி போன்ற 22 போட்டியாளர் நிறுவனங்கள் அருகில் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியிறது.

இந்நிலையில், தற்போது டெஸ்லா நிறுவனம் பாண்ட்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் (BKC) அருகிலேயே மேக்கர் மேக்சிட்டி என்ற கட்டிடத்தில் 4,000 சதுர அடியில் ஒரு ஷோரூம் திறக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டிடத்திற்காக, டெஸ்லா நிறுவனம் மாத வாடகையாக சுமார் 35 லட்சம் ரூபாய் செலுத்துவதோடு, வருடத்திற்கு 5% வாடகை உயர்வும் ஒப்பந்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் காரணமாக, தற்போது ஆப்பிள் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் அருகருகே ஷோரூம் செயல்பட உள்ளன. இதனால், அந்த பகுதி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக மாறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் டெஸ்லா நிறுவனம் செயல்படுவதற்கு அனுமதி உள்ளதா அல்லது இல்லையா என்பது தெரியவில்லை. இருப்பினும், அதே பகுதியில் டெஸ்லா தனது ஷோரூமை உறுதியாக திறக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.