அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக போரை அமெரிக்கா ஆரம்பித்திருந்தாலும், அதன் பொருளாதாரத்திற்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பொருளாதார வல்லுனர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவின் பதிலடியால் அமெரிக்காவிற்கு சுமார் 2 டிரில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அமெரிக்க பங்குச் சந்தை சரிந்திருப்பதோடு, ஆப்பிள், மெட்டா, அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பிற்கு பின்னர் இந்திய மக்கள் அமெரிக்க பொருட்களை புறக்கணிப்பதால், மெக்டொனால்ட்ஸ் மற்றும் ஸ்டார்பக்ஸ் போன்ற நிறுவனங்களின் விற்பனை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா தனது வர்த்தக நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கினால், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பாதிக்கப்படும் என்று ஒரு அறிக்கை கூறுவதாகவும், இதற்கு முக்கிய காரணம், இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக உருவெடுத்திருப்பதுதான் அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளுடன் இந்தியா தனது வர்த்தக உறவுகளை பலப்படுத்தி வருவதால், எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா அமெரிக்காவை மிஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ போன்ற கொள்கைகள் காரணமாக, இந்தியா வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகத் தெரிகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசியல் கௌரவம் காரணமாக இந்த வர்த்தக போரிலிருந்து பின்வாங்க தயாராக இல்லை என்றும், இது சூழ்நிலையை மேலும் ஆபத்தானதாக மாற்றக்கூடும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
இது ஆரம்பம் தான், இன்னும் பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து தனி கரன்ஸி, தனி வர்த்தகம் ஆரம்பித்தால் அமெரிக்காவின் கதி அதோகதிதான் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
