மனிதாபிமானமே இல்லை.. பணியில் சேர்ந்த மூன்றாவது நாளே விலகிய அமேசான் ஊழியர்.. என்ன நடந்தது?

முன்னாள் அமேசான் டெலிவரி ஓட்டுநர் ஒருவரின் சமூக ஊடக பதிவு, அந்த நபர் தனது முதல் பணியில் பெற்ற குறுகிய கால அனுபவத்தை விவரித்த பிறகு ஆன்லைனில் விவாதத்தை தூண்டியுள்ளது. ஒரு பொது மன்றத்தில்…

Amazon Academy 5

முன்னாள் அமேசான் டெலிவரி ஓட்டுநர் ஒருவரின் சமூக ஊடக பதிவு, அந்த நபர் தனது முதல் பணியில் பெற்ற குறுகிய கால அனுபவத்தை விவரித்த பிறகு ஆன்லைனில் விவாதத்தை தூண்டியுள்ளது. ஒரு பொது மன்றத்தில் பகிரப்பட்ட இந்த பதிவு, வேலையின் முதல் சில நாட்களை விவரிக்கிறது.

அமேசானின் டெலிவரி சேவை செய்ய பணியில் சேர்ந்த பிறகு, இது தனது முதல் டெலிவரி வேலை என்று கூறியதோடு, நான் உண்மையில் சிறப்பாக செயல்படுவேன் என்று நினைத்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நான் அந்த வேலைக்கு பொருந்தவில்லை. மூன்றாவது நாளே, ஓட்டுநருக்கு 220 நிறுத்தங்கள் கொண்ட ஒரு டெலிவரி பாதை வழங்கப்பட்டது. இது ஒரு கனமான பணிச்சுமையாகும். சிக்கலான விஷயம் என்னவென்றால், அந்த பாதை நெரிசலான நகர பகுதியில் இருந்தது, அங்கு பார்க்கிங் வசதி குறைவாக இருந்தது, மேலும் வெயில் கடுமையாக கொளுத்தியது. அதாவது 100°F இருந்தது.

இதையெல்லாம் சகித்து கொண்டு பணியை செய்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், சில நிறுத்தங்கள் மட்டுமே தாமதமாக ஓடினாலும், “ஏன் ஓட்டுநர் மிகவும் பின்தங்கியிருக்கிறார்” என்று கேள்வி கேட்கிறார்கள்.

வேலை கடினம் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் ஒருவர் புதிதாக வேலைக்கு சேர்ந்தபோது, பணிச்சுமை அதிகமாக இருக்கும்போது, புதியவர்களுக்கு வழக்கமாக கொடுக்கும் சலுகைகளை விட கூடுதலாக கொடுக்க வேண்டும். நடைமுறை சிக்கல்களை கூறினால், உங்களுக்கு அனுபவம் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். நான் மற்றொரு ஓட்டுநருடன் ஒரு நாள் மட்டுமே பயிற்சி பெற்ற பிறகு தனியாக அனுப்பப்பட்டேன். என் கால்களில் வலி அதிகமாகி வீட்டுக்கு வந்ததும், என்னால் நடக்கவே முடியவில்லை.

“நான் உண்மையில் என்வாடிக்கையாளர்களிடம் நேர்மறையான மதிப்புரைகளை பெற்றேன், ஆனாலும் என் வேலையில் தவறு கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருந்தனர். நான் இன்னும் சில நாட்களில் பணிநீக்கம் செய்யப்படுவேன் என்று முடிவு செய்து தான், வேலையில் சேர்ந்த மூன்றாவது நாளே, நானே முன்வந்து பணியில் இருந்து விலக முடிவு செய்தேன்’ என்று கூறியுள்ளார்.

நெட்டிசன்கள் இந்த பதிவுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்தனர். ஒரு பயனர், “உண்மையாகச் சொன்னால், நீங்கள் ப்ரைம் வாரத்திற்காக பணியமர்த்தப்பட்டீர்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் எப்படியும் உங்களை நிரந்தரமாக வைத்திருக்க திட்டமிடவில்லை என்று கூறினார். கார்ப்பரேட் நிறுவனங்களில் மனிதாபிமானமே இருக்காது என்பது போல் பல கருத்துக்கள் பதிவாகி வருகிறது.