கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட இந்த நோய் மனித இனத்தையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தான் கொரோனா வைரஸ் பிரச்சனை இல்லாமல் உலகில் மனிதர்கள் நிம்மதியாக இருக்கும் நிலையில் கொரோனா போலவே ஒரு புதிய வைரஸ் தற்போது பரவி வருவதாகவும் கொல்கத்தாவில் உள்ள ஒரு பெண்ணுக்கு அந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த வைரஸ் HKU1 என அறியப்படுகிறது. இது மனித கொரோனா வைரஸின் ஒரு வகையாக கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார நிபுணர்கள் கருத்துப்படி HKU1 ஒரு லேசான சுவாச பாதை தொற்று நோய் என்றும், கொரோனா போல புதிய வைரஸாக இல்லை, அதனால் அது உலகளவில் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளனர்.
முதன்முதலில் 2005-ம் ஆண்டு HKU1 கண்டுபிடிக்கப்பட்டது. அது காலப்போக்கில் மனிதர்களுக்குள் பரவி வளர்ந்துள்ளது. HKU1-இன் அறிகுறிகள்
HKU1 வைரஸின் அறிகுறிகள் சாதாரண காய்ச்சலுக்கு ஒத்ததாகவே இருக்கும். மேலும் இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, காய்ச்சல் மற்றும் உடல் களைப்பு இருக்கும்.
பொதுவாக, HKU1 ஆபத்தானது அல்ல, அது சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், முதியோர், சிறுவர், முந்தைய உடல்நிலை பிரச்சனைகள் கவனமாக இருக்க வேண்டும்,
HKU1 எப்படிப் பரவுகிறது என்றால் மற்ற கொரோனா வைரஸ்களின் போலவே நேரடியாக பரவலாம், அல்லது நோயுற்ற நபருடன் நேரடியாக தொடர்பு கொண்டால் அல்லது மாசுபட்ட இடங்களை தொடுவதை தொடர்ந்து முகம், மூக்கு, வாய் தொடும் போது பரவலாம்.
HKU1 பெரும்பாலானோருக்கு பெரிய சுகாதாரப் பிரச்சினையாக அமையாது. எனினும், கைகளை கழுவுதல், சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.