ஆபரேஷன் சிந்தூர் வெற்றி எதிரொலி.. இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டும் உலக நாடுகள்.. முதலில் பிலிப்பைன்ஸ்.. இப்போது இந்தோனேஷியா.. ரூ.3750 கோடிக்கு பிரமோஸ் ஒப்பந்தம்.. ஆயுதங்களை இறக்குமதி செய்த நிலை மாறி, இன்று ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சி.. உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கும் இந்தியா..

இந்தியா-ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பான பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் விற்பனை தொடர்பாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இந்தோனேசிய பாதுகாப்புத் துறை அமைச்சருடன் தற்போது முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.…

brahmos

இந்தியா-ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பான பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் விற்பனை தொடர்பாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இந்தோனேசிய பாதுகாப்புத் துறை அமைச்சருடன் தற்போது முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சுமார் ரூ.3,750 கோடிக்கும் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம், இந்திய பாதுகாப்புத்துறை ஏற்றுமதி வரலாற்றில் ஒரு முக்கிய படியாகும். இரு நாடுகளுக்கும் இடையே விலை நிர்ணயம் குறித்த பரந்த புரிதல் எட்டப்பட்டு, பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்தோனேசியாவிற்கு கடற்படையில் பயன்படுத்தப்படும் பிரமோஸ் ஏவுகணைகளை விற்பதற்கான இந்த ஒப்பந்தம் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.3,750 கோடிக்கும் அதிக மதிப்புடையது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, பிரமோஸ் அமைப்பின் மிகப்பெரிய ஏற்றுமதி ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.

இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தானால், இந்தோனேசியா பிரமோஸ் ஏவுகணை அமைப்பை வாங்கும் இரண்டாவது வெளிநாட்டு வாடிக்கையாளராக மாறும். முன்னதாக, பிலிப்பைன்ஸ் நாடுதான் பிரமோஸ் ஏவுகணைகளை வாங்கிய முதல் வெளிநாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஏவுகணையை உற்பத்தி செய்து, அதை சர்வதேச அளவில் விற்பனை செய்வது, பாதுகாப்பு தயாரிப்பில் இந்தியாவின் வளர்ந்து வரும் வலிமையை வெளிப்படுத்துகிறது.

இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கடல்சார் சவால்களை எதிர்கொள்கின்றன. இத்தகைய நாடுகளுக்கு பிரமோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம், இந்தியா தனது பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தி கொள்கிறது.

அண்மையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பிரமோஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு, அதன் திறன் நிரூபிக்கப்பட்ட நிலையில், இந்த ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வது இந்தியாவுக்கு மேலும் ஒரு சாதகமான அம்சமாகும். மேலும், ஏவுகணை விற்பனை மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையே கூட்டுப்பயிற்சி மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த உறவு, எதிர்காலத்தில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த உதவும்.

இந்த ஒப்பந்தம், இந்தியாவின் பாதுகாப்பு தயாரிப்பு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. (DRDO) மற்றும் ரஷ்யாவின் என்.பி.ஓ.எம். (NPO Mashinostroyeniya) ஆகியவற்றின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவும், இந்தியாவை உலகளாவிய ஆயுதச்சந்தையில் ஒரு முக்கிய ஏற்றுமதியாளராக நிலைநிறுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.