டெல்லியை சேர்ந்த வாலிபர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட இரண்டு நாள் கழித்து, அவரது சகோதரிக்கு WhatsApp மெசேஜ் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த சவுரோப் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக, தன்னுடைய குடும்பத்தினரை பார்க்க இந்தியா வந்திருந்தார். இந்த நிலையில், அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதே சமயம், அவரது மனைவிக்கு ஒரு கள்ளக்காதலன் இருப்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் சவுரோப்பை அவரது மனைவியும் கள்ளக்காதலரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். அதன் பிறகு, அவரது உடலை 15 துண்டுகளாக வெட்டி, ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுவிட்டு, அதன் மீது மண் போட்டு மறைத்து விட்டனர்.
கொலை செய்யப்பட்ட மறுநாள், சவுரோப்பின் மொபைல் போனில் இருந்து அவரது சகோதரிக்கு WhatsApp மெசேஜ் வந்தது. இது தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நடந்துள்ளது.
சகோதரி சந்தேகத்துடன் சவுரோப்பிற்கு வீடியோ கால் செய்தபோது, அவர் எடுக்கவில்லை. ஆனால், மெசேஜ்கள் மட்டும் தொடர்ந்து வந்ததால், அவர் சந்தேகம் அடைந்து உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பிறகு நடந்த விசாரணையில், சவுரோப் இரண்டு நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த வழக்கில் சவுரோப்பின் மனைவியும், அவளது கள்ளக்காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
